Showing posts with label நன்னூல். Show all posts
Showing posts with label நன்னூல். Show all posts

நன்னூல் - பவணந்தி முனிவர்

திருச்சிற்றம்பலம்

சிறப்புப்பாயிரம்

மலர்தலை உலகின் மல்கிருள் அகல
இலகொளி பரப்பி யாவையும் விளக்கும்
பரிதியி னொருதா னாகி முதலீறு
ஒப்பளவு ஆசை முனிவிகந் துயர்ந்த
அற்புத மூர்த்திதன் அலர்தரு தன்மையின் 5
மனஇருள் இரிய மாண்பொருள் முழுவதும்
முனிவற அருளிய மூஅறு மொழியுளும்
குணகடல் குமரி குடகம் வேங்கடம்
எனுநான் கெல்லையின் இருந்தமிழ்க் கடலுள்
அரும்பொரு ளைந்தையும் யாவரும் உணரத் 10
தொகைவகை விரியிற் றருகெனத் துன்னார்
இகலற நூறி யிருநில முழுவதும்
தனதெனக் கோலித் தன்மத வாரணம்
திசைதொறும் நிறுவிய திறலுறு தொல்சீர்க்
கருங்கழல் வெண்குடைக் கார்நிகர் வண்கைத் 15
திருந்திய செங்கோற் சீய கங்கன்
அருங்கலை விநோதன் அமரா பரணன்
மொழிந்தன னாக முன்னோர் நூலின்
வழியே நன்னூற் பெயரின் வகுத்தனன்
பொன்மதிற் சனகைச் சன்மதி முனியருள் 20
பன்னருஞ் சிறப்பிற் பவணந்தி
என்னு நாமத் திருந்தவத் தோனே
திருச்சிற்றம்பலம்

1 பொதுப்பாயிரம்

பாயிரத்தின் பெயர்கள்
முகவுரை பதிகம் அணிந்துரை நூன்முகம்
புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம்

1

பாயிர வகை
பாயிரம் பொதுச்சிறப் பெனஇரு பாற்றே

2

பொதுப்பாயிரம் இன்னதென்பது
நூலே நுவல்வோன் நுவலுந் திறனே
கொள்வோன் கோடற் கூற்றாம் ஐந்தும்
எல்லா நூற்கும் இவைபொதுப் பாயிரம்

3
1. நூலினது வரலாறு

நூல் இன்னதென்பது
நூலின் இயல்பே நுவலின் ஒரிரு
பாயிரந் தோற்றி மும்மையின் ஒன்றாய்
நாற்பொருட் பயத்தோ டெழுமதந் தழுவி
ஐயிரு குற்றமும் அகற்றியம் மாட்சியோடு
எண்ணான் குத்தியின் ஒத்துப் படலம்
என்னும் உறுப்பினிற் சூத்திரங் காண்டிகை
விருத்தி யாகும் விகற்பநடை பெறுமே

4

மூவகை நூல்
முதல்வழி சார்பென நூல்மூன் றாகும்

5

முதனூல் இன்னதென்பது
அவற்றுள்
வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதனூ லாகும்

6

வழிநூல் இன்னதென்பது
முன்னோர் நூலின் முடிபுஒருங் கொத்துப்
பின்னோன் வேண்டும் விகற்பங் கூறி
அழியா மரபினது வழிநூ லாகும்

7

சார்புநூல் இன்னதென்பது
இருவர் நூற்கும் ஒருசிறை தொடங்கித்
திரிபுவே றுடையது புடைநூ லாகும்

8

வழிநூலுக்குஞ் சார்புநூலுக்கும் எய்தியதன்மேற் சிறப்புவிதி
முன்னோர் மொழிபொருளே யன்றி யவர்மொழியும்
பொன்னேபோற் போற்றுவம் என்பதற்கும் - முன்னோரின்
வேறுநூல் செய்துமெனும் மேற்கோளி லென்பதற்குங்
கூறுபழஞ் சூத்திரத்தின் கோள்

9

நாற்பொருட் பயன்
அறம்பொரு ளின்பம்வீ டடைதல்நூற் பயனே

10

எழுமதம்
எழுவகை மதமே உடன்படல் மறுத்தல்
பிறர்தம் மதமேற் கொண்டு களைவே
தாஅன் நாட்டித் தனாது நிறுப்பே
இருவர் மாறுகோள் ஒருதலை துணிவே
பிறர்நூற் குற்றங் காட்டல் ஏனைப்
பிறிதொடு படாஅன் தன்மதங் கொளலே

11

பத்துக் குற்றம்
குன்றக் கூறல் மிகைபடக் கூறல்
கூறியது கூறல் மாறுகொளக் கூறல்
வழூஉச்சொற் புணர்த்தல் மயங்க வைத்தல்
வெற்றெனத் தொடுத்தல் மற்றொன்று விரித்தல்
சென்றுதேய்ந் திறுதல் நின்றுபய னின்மை
என்றிவை யீரைங் குற்றம் நூற்கே

12

பத்தழகு
சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல்
நவின்றோர்க் கினிமை நன்மொழி புணர்த்தல்
ஓசை யுடைமை ஆழமுடைத் தாதல்
முறையின் வைப்பே உலகம்மலை யாமை
விழுமியது பயத்தல் விளங்குதா ரணத்தது
ஆகுதல் நூலிற் கழகெனும் பத்தே

13

முப்பத்திரண்டு உத்தி
நுதலின் புகுதல் ஓத்துமுறை வைப்பே
தொகுத்துச் சுட்டல் வகுத்துக் காட்டல்
முடித்துக் காட்டல் முடிவிடங் கூறல்
தானெடுத்து மொழிதல் பிறன்கோட் கூறல்
சொற்பொருள் விரித்தல் தொடர்ச்சொற் புணர்த்தல்
இரட்டுற மொழிதல் ஏதுவின் முடித்தல்
ஒப்பின் முடித்தல் மாட்டெறிந் தொழுகல்
இறந்தது விலக்கல் எதிரது போற்றல்
முன்மொழிந்து கோடல் பின்னது நிறுத்தல்
விகற்பத்தின் முடித்தல் முடிந்தது முடித்தல்
உரைத்தும் என்றல் உரைத்தாம் என்றல்
ஒருதலை துணிதல் எடுத்துக் காட்டல்
எடுத்த மொழியி னெய்த வைத்தல்
இன்ன தல்ல திதுவென மொழிதல்
எஞ்சிய சொல்லி னெய்தக் கூறல்
பிறநூன் முடிந்தது தானுடன் படுதல்
தன்குறி வழக்க மிகஎடுத் துரைத்தல்
சொல்லின் முடிவி னப்பொருள் முடித்தல்
ஒன்றின முடித்தல் தன்னின முடித்தல்
உய்த்துணர வைப்பென உத்தியெண் ணான்கே

14

உத்தி இன்னதென்பது
நூற்பொருள் வழக்கொடு வாய்ப்பக் காட்டி
ஏற்புழி யறிந்திதற் கிவ்வகை யாமெனத்
தகும்வகை செலுத்துதல் தந்திர உத்தி

15

ஓத்து இன்னதென்பது
நேரின மணியை நிரல்பட வைத்தாங்கு
ஓரினப் பொருளை யொருவழி வைப்பது
ஓத்தென மொழிப உயர்மொழிப் புலவர்

16

படலம் இன்னதென்பது
ஒருநெறி யின்றி விரவிய பொருளாற்
பொதுமொழி தொடரின் அதுபடல மாகும்

17

சூத்திரம் இன்னதென்பது
சில்வகை யெழுத்திற் பல்வகைப் பொருளைச்
செல்வன் ஆடியிற் செறித்தினிது விளக்கித்
திட்ப நுட்பஞ் சிறந்தன சூத்திரம்

18

சூத்திர நிலை
ஆற்றொழுக் கரிமா நோக்கந் தவளைப்
பாய்த்துப் பருந்தின்வீழ் வன்னசூத் திரநிலை

19

சூத்திரங்களுக்குக் காரண
வகையால் வரும் பெயர் வேறுபாடு
பிண்டந் தொகைவகை குறியே செய்கை
கொண்டியல் புறனடைக் கூற்றன சூத்திரம்

20

உரையினது பொது இலக்கணம்
பாடங் கருத்தே சொல்வகை சொற்பொருள்
தொகுத்துரை உதாரணம் வினாவிடை விசேடம்
விரிவுஅதி காரந் துணிவு பயனோடு
ஆசிரிய வசனமென் றீரே ழுரையே

21

காண்டிகையுரை இன்னதென்பது
கருத்துப் பதப்பொருள் காட்டு மூன்றினும்
அவற்றொடு வினாவிடை யாக்க லானும்
சூத்திரத் துட்பொருள் தோற்றுவ காண்டிகை

22

விருத்தியுரை இன்னதென்பது
சூத்திரத் துட்பொருள் அன்றியும் ஆண்டைக்கு
இன்றி யமையா யாவையும் விளங்கத்
தன்னுரை யானும் பிறநூ லானும்
ஐயம் அகலஐங் காண்டிகை யுறுப்பொடு
மெய்யினை எஞ்சா திசைப்பது விருத்தி

23

நூலென்னும் பெயர்க் காரணம்
பஞ்சிதன் செல்லாப் பனுவல் இழையாகச்
செஞ்சொற் புலவனே சேயிழையா - எஞ்சாத
கையேவா யாகக் கதிரே மதியாக
மையிலா நூல்முடியு மாறு

24
உரத்தின் வளம்பெருக்கி யுள்ளிய தீமைப்
புரத்தின் வளமுருக்கிப் பொல்லா - மரத்தின்
கனக்கோட்டந் தீர்க்குநூ லஃதேபோன் மாந்தர்
மனக்கோட்டந் தீர்க்குநூன் மாண்பு 25
2 ஆசிரியனது வரலாறு

நல்லாசிரியர் இலக்கணம்
குலனருள் தெய்வங் கொள்கை மேன்மை
கலைபயில் தௌிவு கட்டுரை வன்மை
நிலைமலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும்
உலகியல் அறிவோடு உயர்குணம் இனையவும்
அமைபவன் நூலுரை யாசிரி யன்னே

26
தெரிவரும் பெருமையுந் திண்மையும் பொறையும்
பருவம் முயற்சி யளவிற் பயத்தலும்
மருவிய நன்னில மாண்பா கும்மே 27
அளக்க லாகா அளவும் பொருளும்
துளக்க லாகா நிலையுந் தோற்றமும்
வறப்பினும் வளந்தரும் வண்மையு மலைக்கே 28
ஐயந் தீரப் பொருளைப் யுணர்த்தலும்
மெய்ந்நடு நிலையு மிகுநிறை கோற்கே 29
மங்கல மாகி யின்றி யமையாது
யாவரு மகிழ்ந்து மேற்கொள மெல்கிப்
பொழுதின் முகமலர் வுடையது பூவே 30

ஆசிரியராகாதார் இலக்கணம்
மொழிகுணம் இன்மையும் இழிகுண இயல்பும்
அழுக்கா றவாவஞ்சம் அச்சம் ஆடலும்
கழற்குடம் மடற்பனை பருத்திக் குண்டிகை
முடத்தெங் கொப்பென முரண்கொள் சிந்தையும்
உடையோர் இலரா சிரியரா குதலே

31
பெய்தமுறை யன்றிப் பிறழ உடன்றரும்
செய்தி கழற்பெய் குடத்தின் சீரே 32
தானே தரக்கொளின் அன்றித் தன்பால்
மேவிக் கொளக்கொடா விடத்தது மடற்பனை 33
அரிதிற் பெயக்கொண் டப்பொருள் தான்பிறர்க்கு
எளிதீ வில்லது பருத்திக் குண்டிகை 34
பல்வகை யுதவி வழிபடு பண்பின்
அல்லோர்க் களிக்கும் அதுமுடத் தெங்கே 35
3 பாடஞ்சொலல்லின் வரலாறு

ஈதல் இயல்பே இயம்புங் காலைக்
காலமும் இடனும் வாலிதின் நோக்கிச்
சிறந்துழி யிருந்துதன் தெய்வம் வாழ்த்தி
உரைக்கப் படும்பொருள் உள்ளத் தமைத்து
விரையான் வெகுளான் விரும்பி முகமலர்ந்து
கொள்வோன் கொள்வகை யறிந்துஅவன் உளங்கொளக்
கோட்டமில் மனத்தின்நூல் கொடுத்தல் என்ப 36
4 மாணாக்கனது வரலாறு

மாணாக்கர் இலக்கணம்
தன்மகன் ஆசான் மகனே மன்மகன்
பொருள்நனி கொடுப்போன் வழிபடு வோனே
உரைகோ ளாளற்கு உரைப்பது நூலே

37
அன்னம் ஆவே மண்ணொடு கிளியே
இல்லிக் குடம்ஆடு எருமை நெய்யரி
அன்னர் தலையிடை கடைமா ணாக்கர் 38

மாணாக்கராகாதார் இலக்கணம்
களிமடி மானி காமி கள்வன்
பிணியன் ஏழை பிணக்கன் சினத்தன்
துயில்வோன் மந்தன் தொன்னூற் கஞ்சித்
தடுமா றுளத்தன் தறுகணன் பாவி
படிறன்இன் னோர்க்குப் பகரார் நூலே

39
5 பாடங்கேட்டலின் வரலாறு

கோடல் மரபே கூறுங் காலைப்
பொழுதொடு சென்று வழிபடல் முனியான்
குணத்தொடு பழகி யவன்குறிப் பிற்சார்ந்து
இருவென இருந்து சொல்லெனச் சொல்லிப்
பருகுவன் அன்னஆர் வத்த னாகிச்
சித்திரப் பாவையின் அத்தகவு அடங்கிச்
செவிவா யாக வெஞ்சுகள னாகக்
கேட்டவை கேட்டவை விடாதுளத் தமைத்துப்
போவெனப் போதல் என்மனார் புலவர் 40
நூல்பயில் இயல்பே நுவலின்வழக் கறிதல்
பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல்
ஆசாற் சார்ந்தவை அமைவரக் கேட்டல்
அம்மாண் புடையோர் தம்மொடு பயிறல்
வினாதல் வினாயவை விடுத்தல் என்றிவை
கடனாக் கொளினே மடம்நனி யிகக்கும் 41
ஒருகுறி கேட்போன் இருகாற் கேட்பிற்
பெருக நூலிற் பிழைபா டிலனே 42
முக்காற் கேட்பின் முறையறிந் துரைக்கும் 43
ஆசா னுரைத்த தமைவரக் கொளினும்
காற்கூ றல்லது பற்றல னாகும் 44
அவ்வினை யாளரொடு பயில்வகை யொருகாற்
செவ்விதின் உரைப்ப அவ்விரு காலும்
மையறு புலமை மாண்புடைத் தாகும் 45
அழலின் நீங்கான் அணுகான் அஞ்சி
நிழலின் நீங்கான் நிறைந்த நெஞ்சமோடு
எத்திறத் தாசான் உவக்கும் அத்திறம்
அறத்திற் றிரியாப் படர்ச்சி வழிபாடே 46
6. சிறப்புப் பாயிரத்திலக்கணம்

சிறப்புப் பாயிரத்துக்குப் பொதுவிதி
ஆக்கியோன் பெயரே வழியே யெல்லை
நூற்பெயர் யாப்பே நுதலிய பொருளே
கேட்போர் பயனோ டாயெண் பொருளும்
வாய்ப்பக் காட்டல் பாயிரத் தியல்பே

47
காலங் களனே காரண மென்றிம்
மூவகை யேற்றி மொழிநரு முளரே 48

நூற்பெயருக்குச் சிறப்புவிதி
முதல்நூல் கருத்தன் அளவு மிகுதி
பொருள்செய் வித்தோன் தன்மைமுத னிமித்தினும்
இடுகுறி யானும்நூற் கெய்தும் பெயரே

49

வழியின்வகையாகிய நூல்யாப்புக்குச் சிறப்புவிதி
தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்ப்பு
எனத்தகும் நூல்யாப் பீரிரண் டென்ப

50

சிறப்புப்பாயிரஞ் செய்தற்குரியார் இவரென்பது
தன்னா சிரியன் தன்னொடு கற்றேன்
தன்மா ணாக்கன் தகுமுரை காரனென்று
இன்னோர் பாயிரம் இயம்புதல் கடனே

51

சிறப்புப்பாயிரம் பிறர் செய்ததற்குக் காரணம்
தோன்றா தோற்றித் துறைபல முடிப்பினும்
தான்தற் புகழ்தல் தகுதி யன்றே

52

தற்புகழ்ச்சி குற்றமாகாத இடங்கள்
மன்னுடை மன்றத் தோலைத் தூக்கினும்
தன்னுடை யாற்றல் உனரா ரிடையினும்
மன்னிய அவையிடை வெல்லுறு பொழுதினும்
தன்னை மறுதலை பழித்த காலையும்
தன்னைப் புகழ்தலுந் தகும்புல வேற்கே

53

பாயிரம் நூலுக்கு இன்றியமையாச் சிறப்பின தென்பது
ஆயிர முகத்தா னகன்ற தாயினும்
பாயிர மில்லது பனுவ லன்றே

54
மாடக்குச் சித்திரமும் மாநகர்க்குக் கோபுரமும்
ஆடமைத்தோள் நல்லார்க் கணியும்போல் - நாடிமுன்
ஐதுரையா நின்ற அணிந்துரையை எந்நூற்கும்
பெய்துரையா வைத்தார் பெரிது 55
2. எழுத்ததிகாரம்
1 எழுத்தியல்


கடவுள் வணக்கமும் அதிகாரமும்
பூமலி அசோகின் புனைநிழல் அமர்ந்த
நான்முகற் றொழுதுநன் கியம்புவன் எழுத்தே

56

எழுத்திலக்கணத்தின் பகுதி
எண்பெயர் முறைபிறப்பு உருவம் மாத்திரை
முதலீறு இடைநிலை போலி யென்றா
பதம்புணர்பு எனப்பன் னிருபாற் றதுவே

57
1. எண்

எழுத்து இன்னதென்பதும் அதன்வகையும்
மொழிமுதற் காரணம் ஆம்அணுத் திரளொலி
எழுத்துஅது முதல்சார் பெனஇரு வகைத்தே

58

முதலெழுத்தின் விரி
உயிரும் உடம்புமாம் முப்பது முதலே

59

சார்பெழுத்தின் வகை
உயிர்மெய் ஆய்தம் உயிரளபு ஒற்றளபு
அஃகிய இ உ ஐ ஓள மஃகான்
தனிநிலை பத்துஞ் சார்பெழுத் தாகும்

60
சார்பெழுத்தின் விரி
உயிர்மெய் இரட்டுநூற் றெட்டுஉய ராய்தம்
எட்டுஉயி ரளபுஎழு மூன்றுஒற் றளபெடை
ஆறேழ் அஃகும் இம்முப் பானேழ்
உகரம் ஆறாறு ஐகான் மூன்றே
ஓளகான் ஒன்றே மஃகான் மூன்றே
ஆய்தம் இரண்டொடு சார்பெழுத் துறுவிரி
ஒன்றோழி முந்நூற் றெழுபான் என்ப

61
2. பெயர்

பெயர்க்கெல்லாம் பொது இலக்கணம்
இடுகுறி காரணப் பெயர்பொதுச் சிறப்பின

62

எழுத்தின் பெயர்
அம்முதல் ஈறாறு ஆவி கம்முதல்
மெய்ம்மூ ஆறென விளம்பினர் புலவர்

63
அவற்றுள்
அ இ உ எ ஒக்குறில் ஐந்தே 64
ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள நெடில் 65
அ இ உம்முதற் றனிவரிற் சுட்டே 66
எ யா முதலும் ஆ ஓ ஈற்றும்
ஏ யிரு வழியும் வினாஆ கும்மே 67
வல்லினம் க ச ட த ப ற வெனவாறே 68
மெல்லினம் ங ஞ ண ந ம ன வெனவாறே 69
இடையினம் ய ர ல வ ழ ள வெனவாறே 70

இன எழுத்து
ஐஒளஇ உச் செறிய முதலெழுத்து
இவ்விரண் டோரின மாய்வரல் முறையே

71

இனம் என்பதற்குக் காரணம்
தானம் முயற்சி அளவு பொருள்வடிவு
ஆனஒன் றாதியோர் புடையொப் பினமே

72
3. முறை

சிறப்பினும் இனத்தினுஞ் செறிந்தீண் டம்முதல்
நடத்தல் தானே முறையா கும்மே 73
4 பிறப்பு



பிறப்பின் பொதுவிதி
நிைறுயுயிர் முயற்சியின் உள்வளி துரப்ப
எழும்அணுத் திரளுரங் கண்டம் உச்சி
மூக்குற் றிதழ்நாப் பல்லணத் தொழிலின்
வெவ்வே றெழுத்தொலி யாய்வரல் பிறப்பே

74

முதலெழுத்துக்களுக்கு இடப்பிறப்பு
அவ்வழி
ஆவி யிடைமை யிடமிட றாகும்
மேவு மென்மைமூக் குரம்பெறும் வன்மை

75

முதலெழுத்துக்களுக்கு முயற்சிப் பிறப்பு
அவற்றுள்
முயற்சியுள் அ ஆ அங்காப் புடைய

76
இ ஈ எ ஏ ஐ அங் காப்போடு
அண்பல் முதல்நா விளிம்புற வருமே 77
உ ஊ ஒ ஓ ஒள இதழ் குவிவே 78
கஙவுஞ் சஞவும் டணவு முதலிடை
நுனிநா அண்ண முறமுறை வருமே 79
அண்பல் லடிநா முடியுறத் தநவரும் 80
மீகீழ் இதழுறப் பம்மப் பிறக்கும் 81
அடிநா வடியண முறயத் தோன்றும் 82
அண்ணம் நுனிநா வருட ரழவரும் 83
அண்பல் முதலும் அண்ணமு முறையின்
நாவிளிம்பு வீங்கி ஒற்றவும் வருடவும்
லகார ளகாரமா யிரண்டும் பிறக்கும் 84
மேற்பல் லிதழுற மேவிடும் வவ்வே 85
அண்ண நுனிநா நனியுறிற் றனவரும் 86
சார்பெழுத்துக்கு இடமுயற்சி
ஆய்தக் கிடந்தலை அங்கா முயற்சி
சார்பெழுத் தேனவுந் தம்முத லனைய

87

பிறப்புக்குப் புறனடை
எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில்
திரிபுந் தத்தமிற் சிறதுள வாகும்

88

உயிர்மெய்
புள்ளிவிட் டவ்வொடு முன்னுரு வாகியும்
ஏனை உயிரோ டுருவு திரிந்தும்
உயிரள வாயதன் வடிவொழித் திருவயிற்
பெயரொடும் ஒற்றுமுன் னாய்வரும் உயிர்மெய்

89

முற்றாய்தம்
குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி
உயிரொடு புணர்ந்தவல் லாறன் மிசைத்தே

90

உயிரளபெடை
இசைகெடின் மொழிமுத லிடைகடை நிலைநெடில்
அளபெழும் அவற்றவற் றினக்குறில் குறியே

91

ஒற்றளபெடை
ங ஞ ண ந ம ன வ ய ல ள ஆய்தம்
அளபாங் குறிலிணை குறிற்கீ ழிடைகடை
மிகலே அவற்றின் குறியாம் வேறே

92

குற்றியலிகரம்
யகரம் வரக்குற ளுத்திரி யிகரமும்
அசைச்சொல் மியாவின் இகரமுங் குறிய

93

குற்றியலுகரம்
நெடிலொடு ஆய்தம் உயிர்வலி மெலியிடைத்
தொடர்மொழி யிறுதி வன்மையூ ருகரம்
அஃகும் பிறமேற் றொடரவும் பெறுமே

94

ஐகார ஒளகாரக் குறுக்கங்கள்
தற்சுட்டு அளபொழி ஐம்மூ வழியும்
நையும் ஒளவும் முதலற் றாகும்

95

மகரக் குறுக்கும்
ண ன முன்னும் வஃகான் மிசையுமக் குறுகும்

96

ஆய்தக் குறுக்கம்
ல ள வீற் றியைபினாம் ஆய்தம் அஃகும்

97
5. உருவம்
தொல்லை வடிவின எல்லா எழுத்தும்ஆண்டு
எய்தும் எகர ஒகரமெய் புள்ளி 98
6. மாத்திரை

எழுத்துக்களின் மாத்திரை
மூன்றுஉயி ரளபுஇரண் டாம்நெடி லொன்றே
குறிலோடு ஐஒளக் குறுக்கம் ஒற்றளபு
அரைஒற்று இஉக் குறுக்கம் ஆய்தம்
கால்குறள் மஃகா னாய்த மாத்திரை

99

மாத்திரை இன்னதென்பது
இயல்பெழு மாந்த ரிமைநொடி மாத்திரை

100

மாத்திரைக்குப் புறனடை
ஆவியும் ஒற்றும் அளவிறந் திசைத்தலும்
மேவு மிசைவிளி பண்டமாற் றாதியின்

101
7. முதனிலை

மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள்
பன்னீ ருயிருங் க ச த ந ப ம வ ய
ஞ ங ஈ ரைந்துயிர் மெய்யு மொழிமுதல்

102
பொதுவிதியுட் சிறப்புவிதி
உ ஊ ஒ ஒ வலவொடு வம்முதல்

103
அ ஆ உ ஊ ஓ ஒள யம்முதல் 104
அ ஆ எ ஒவ்வோ டாகும் ஞம்முதல் 105
சுட்டியா எகர வினாவழி அவ்வை
ஒட்டி ஙவ்வு முதலா கும்மே 106
8. இறுதிநிலை

மொழிக்கிறுதியில் வரும் எழுத்துக்கள்
ஆவி ஞணநமன யரலவ ழளமெய்
சாயும் உகரம்நா லாறு மீறே

107

சிலவற்றிற்குச் சிறப்புவிதி
குற்றுயி ரளபி னீறாம் எகரம்
மெய்யோடே லாதொந் நவ்வொ டாமௌக்
ககர வகரமோ டாகு மென்ப

108
எழுத்தினது முதலும் ஈறும்
நின்றநெறி யேஉயிர் மெய்முத லீறே

109
9. இடைநிலை மயக்கம்

க ச த ப ஒழித்தஈ ரேழன் கூட்டம்
மெய்ய்மயக்கு உடனிலை ரழஒழித் தீரெட்
டாகுமிவ் விருபான் மயக்கும் மொழியிடை
மேவும் உயிர்மெய் மயக்கள வின்றே 110

வேற்றுநிலை மெய்ம்மயக்கத்திற்குச் சிறப்புவிதி
ஙம்முன் கவ்வாம் வம்முன் யவ்வே

111
ஞநமுன் தம்மினம் யகரமொ டாகும் 112
டறமுன் கசப மெய்யுடன் மயங்கும் 113
ணனமுன் னினங்கச ஞபமய வவ்வரும் 114
மம்முன் பயவ மயங்கு மென்ப 115
யரழ முன்னர் மொழிமுதல் மெய்வரும் 116
லளமுன் கசப வயஒன் றும்மே 117
உடனிலை மெய்மயக்கத்தின் சிறப்புவிதி
ரழஅல்லன தம்முன் தாம்உடன் நிலையும் 118

தனிமெய்யுடன் தனிமெய்யாய் மயங்குவன இவை
மொழிக்கு உறுப்பாக மயங்காதன இவை
யரழவெற் றின்முன் கசதப ஙஞநம
ஈரொற் றாம்ரழத் தனிக்குறி லணையா

119

செய்யுளில் ஈரொற்றாய் நிற்கும் எழுத்துக்கள்
லளமெய் திரிந்த னணமுன் மகாரம்
நைந்தீ ரொற்றாஞ் செய்யு ளுள்ளே

120

முதனிலை இறுதிநிலை
இடைநிலைகளுக்குப் புறனடை
தம்பெயர் மொழியின் முதலு மயக்கமும்
இம்முறை மாறியும் இயலு மென்ப

121
10 போலி

மொழியிறுதிப் போலி
மகர இறுதி அஃறிணைப் பெயரின்
னகரமோ டுறழா நடப்பன வுளவே

122

மொழிமுதற் போலியும் மொழியிடைப் போலியும்
அ ஐ முதலிடை யொக்குஞ் சஞயமுன்

123

மொழியிடைப் போலி
ஐகான் யவ்வழி நவ்வொடு சில்வழி
ஞஃகா னுறழு மென்மரு முளரே

124

சந்தியக்கரம்
அம்முன் இகரம் யகர மென்றிவை
எய்தின் ஐயொத் திசைக்கும் அவ்வோடு
உவ்வும் வவ்வும் ஒளவோ ரன்ன

125

எழுத்தின் சாரியைகள்
மெய்க ளகரமும் நெட்டுயிர் காரமும்
ஐஒளக் கானு மிருமைக் குறிலிவ்
இரண்டொடு கரமுமாஞ் சாரியை பெறும்பிற

126

இவ்வியலுக்குப் புறனடை
மொழியாய்த் தொடரினு முன்னனைத் தெழுத்தே

127

2. பதவியல்
1 பதம்

பதம் இன்னதென்பதும் அதன் வகையும்
எழுத்தே தனித்துந் தொடர்ந்தும் பொருள்தரிற்
பதமாம் அதுபகாப் பதம்பகு பதமென
இருபா லாகி யியலு மென்ப

128

ஓரேழுத்தொரு மொழி
உயிர்மவி லாறும் தபநவி லைந்தும்
கவசவி னாலும் யவ்வி லொன்றும்
ஆகும் நெடில்நொது ஆங்குறி லிரண்டோடு
ஓரெழுத் தியல்பதம் ஆறேழ் சிறப்பின

129

தொடரெழுத்தொரு மொழி
பகாப்பதம் ஏழும் பகுபதம் ஒன்பதும்
எழுத்தீ றாகத் தொடரு மென்ப

130

பகாப்பதம்
பகுப்பாற் பயனற் றிடுகுறி யாகி
முன்னே யொன்றாய் முடிந்தியல் கின்ற
பெயர்வினை இடைஉரி நான்கும் பகாப்பதம்

131

பகுபதம்
பொருளிடங் காலஞ் சினைகுணந் தொழிலின்
வருபெயர் பொழுதுகொள் வினைபகு பதமே

132

பகுபத உறுப்புக்கள்
பகுதி விகுதி இடைநிலை சாரியை
சந்தி விகாரம் ஆறினும் ஏற்பவை
முன்னிப் புணர்ப்ப முடியுமெப் பதங்களும்

133
2. பகுதி

பகுதி இன்னதென்பது
தத்தம்
பகாப்ப தங்களே பகுதி யாகும்

134

பண்புப் பகுதிக்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி
செம்மை சிறுமை சேய்மை தீமை
வெம்மை புதுமை மென்மை மேன்மை
திண்மை யுண்மை நுண்மை யிவற்றெதிர்
இன்னவும் பண்பிற் பகாநிலைப் பதமே

135
ஈறு போதல் இடையுகரம் இய்யாதல்
ஆதி நீடல் அடியகரம் ஐயாதல்
தன்னொற் றிரட்டல் முன்னின்ற மெய்திரிதல்
இனமிகல் இனையவும் பண்பிற் கியல்பே 136

தெரிநிலைவினைப் பகுதிக்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி
நடவா மடிசீ விடுகூ வேவை
நொப்போ வௌவுரிஞ் உண்பொருந் திருந்தின்
தேய்பார் செல்வவ் வாழ்கே ளஃகென்று
எய்திய இருபான் மூன்றா மீற்றவும்
செய்யெ னேவல் வினைப்பகாப் பதமே

137

ஏவற்பகுதிக்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி
செய்யென் வினைவழி விப்பி தனிவரிற்
செய்வியென் னேவ லிணையினீ ரேவல்

138

வினைப்பகுதிக்குப் புறனடை
விளம்பிய பகுதிவே றாதலும் விதியே

139
3. விகுதி
அன்ஆன் அள்ஆள் அர்ஆர் பம்மார்
அஆ குடுதுறு என்ஏன் அல்அன்
அம்ஆம் எம்ஏம் ஓமொ டும்மூர்
கடதற ஐஆய் இம்மின் இர்ஈர்
ஈயர் கயவும் என்பவும் பிறவும்
வினையின் விகுதி பெயரினுஞ் சிலவே 140
4. இடைநிலை

பெயரிடைநிலை
இலக்கியங் கண்டதற்கு இலக்கணம் இயம்பலிற்
பகுதி விகுதி பகுத்திடை நின்றதை
வினைப்பெய ரல்பெயர்க் கிடைநிலை யெனலே

141

இறந்தகாலவினை இடைநிலை
தடறவொற் றின்னே யைம்பால் மூவிடத்து
இறந்த காலந் தருந்தொழி லிடைநிலை

142

நிகழ்கால இடைநிலை
ஆநின்று கின்று கிறுமூ விடத்தின்
ஐம்பால் நிகழ்பொழு தறைவினை யிடைநிலை

143

எதிர்கால இடைநிலை
பவ்வ மூவிடத் தைம்பா லெதிர்பொழுது
இசைவினை யிடைநிலை யாமிவை சிலஇல

144

காலங்காட்டும் விகுதி
றவ்வொ டுகர வும்மைநிகழ் பல்லவுந்
தவ்வொ டிறப்பு மெதிர்வும் டவ்வொடு
கழிவுங் கவ்வோ டெதிர்வுமின் னேவல்
வியங்கோ ளிம்மமா ரெதிர்வும் பாந்தஞ்
செலவொடு வரவுஞ் செய்யுநிகழ் பெதிர்வும்
எதிர்மறை மும்மையு மேற்கு மீங்கே

145
5. வடமொழியாக்கம்

ஆரியமொழி தமிழில் வடமொழியாதல்
இடையில் நான்கு மீற்றி லிரண்டும்
அல்லா அச்சுஐ வருக்கமுத லீறி
யவ்வாதி நான்மை ளவ்வாகு மையைம்
பொதுவெழுத் தொழிந்தநா லேழுந் திரியும்

146

ஆரியமொழி வடமொழியாதற்குச் சிறப்புவிதி
அவற்றுள்
ஏழாமுயி ரிய்யு மிருவுமை வருக்கத்
திடையின் மூன்று மவ்வம் முதலும்
எட்டே யவ்வு முப்பது சயவும்
மேலொன்று சடவு மிரண்டு சதவும்
மூன்றே யகவு மைந்திரு கவ்வும்
ஆவீ றையு மீயீ றிகரமும்

147
ரவ்விற் கம்முத லாமுக் குறிலும்
லவ்விற் கிம்முத லிரண்டும் யவ்விற்
கிய்யு மொழிமுத லாகிமுன் வருமே 148
இணைந்தியல் காலை யரலக் கிகரமும்
மவ்வக் குகரமு நகரக் ககரமும்
மிசைவரும் ரவ்வழி யுவ்வு மாம்பிற 149

தமிழெழுத்திற் சிறப்பெழுத்தும் பொது எழுத்தும்
றனழஎ ஒவ்வு முயிர்மெய்யு முயிரளபு
அல்லாச் சார்புந் தமிழ்பிற பொதுவே

150
3. உயிரீற்றுப் புணரியல்

1. புணர்ச்சி

புணர்ச்சி இன்னதென்பது
மெய்யுயிர் முதலீ றாமிரு பதங்களும்
தன்னொடும் பிறிதொடும் அல்வழி வேற்றுமைப்
பொருளிற் பொருந்துழி நிலைவரு மொழிகள்
இயல்பொடு விகாரத் தியைவது புணர்ப்பே

151

அல்வழி வேற்றுமை இவையென்பது
வேற்றுமை ஐம்முத லாறாம் அல்வழி
தொழில்பண்பு உவமை உம்மை அன்மொழி
எழுவாய் விளியீ ரெச்சமுற் றிடையுரி
தழுவு தொடரடுக் கெனஈ ரேழே

152

இயல்பு புணர்ச்சி
விகார மனைத்தும் மேவல தியல்பே

153

விகாரப் புணர்ச்சி
தோன்றல் திரிதல் கெடுதல் விகாரம்
மூன்று மொழிமூ விடத்து மாகும்

154

செய்யுள் விகாரம்
வலித்தல் மெலித்தல் நீட்டல் குறுக்கல்
விரித்தல் தொகுத்தலும் வருஞ்செய்யுள் வேண்டுழி

155
ஓருமொழி மூவழிக் குறைதலு மனைத்தே 156
புணர்ச்சி விகாரத்தில் வருவதோரையம் ஓழித்தல்
ஓருபுணர்க் கிரண்டு மூன்றும் உறப்பெறும் 157
2. பொதுப்புணர்ச்சி

எல்லா ஈற்றின் முன்னும் மெல்லினமும்
இடையினமும் புணர்தல்
எண்மூ எழுத்தீற் றெவ்வகை மொழிக்கும்
முன்வரும் ஞ ந ம ய வக்க ளியல்பும்
குறில்வழி யத்தனி யைந்நொது முன்மெலி
மிகலுமாம் ண ள ன ல வழிநத் திரியும்

158

பொதுப்பெயர் உயர்திணைப் பெயரீறு
பொதுப்பெய ருயர்திணைப் பெயர்க ளீற்றுமெய்
வலிவரி னியல்பாம் ஆவி யரமுன்
வன்மை மிகாசில விகாரமாம் உயர்திணை

159

வினாப்பெயர் விளிப்பெயர் முன் வல்லினம்
ஈற்றியா வினாவிளிப் பெயர்முன்வலி இயல்பே

160

முன்னிலை வினை ஏவல்வினைமுன் வல்லினம்
ஆவி யரழ இறுதிமுன் னிலைவினை
ஏவல்முன் வல்லினம் இயல்பொடு விகற்பே

161
3. உயிறீற்றுச் சிறப்புப் புணர்ச்சி

உயிர்முன் உயிர் புணர்தல்
இ ஈ ஐ வழி யவ்வும் ஏனை
உயிர்வழி வவ்வும் ஏமுனிவ் விருமையும்
உயிர்வரின் உடம்படு மெய்யென் றாகும்

162

வினாச்சுட்டின்முன் நாற்கணமும் புணர்தல்
எகர வினாமுச் சுட்டின் முன்னர்
உயிரும் யகரமும் எய்தின் வவ்வும்
பிறவரின் அவையுந் தூக்கிச் சுட்டு
நீளின் யகரமுந் தோன்றுதல் நெறியே

163

குற்றியலுகரமுன்னுஞ் சில முற்றியலுகர
முன்னும் உயிரும் உகரமும் புணர்தல்
உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்
யவ்வரின் இய்யாம் முற்றுமற் றொரோவழி

164
4. உயிரீற்றுமுன் வல்லினம்

உயிரீற்றின்முன் வல்லினம் புணர்தல்
இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன்
க ச த ப மிகும்வித வாதன மன்னே

165

உயிரீற்றுச் சிலமரப்பெயர்முன்
வல்லினம் புணர்தல்
மரப்பெயர் முன்னர் இனமெல் லெழுத்து
வரப்பெறு னவுமுள வேற்றுமை வழியே

166

அகர ஈற்றுச் சிறப்புவிதி
செய்யிய என்னும் வினையெச்சம் பல்வகைப்
பெயரி னெச்சமுற் றாற னுருபே
அஃறிணைப் பன்மை அம்மமுன் னியல்பே

167
வாழிய என்பதன் ஈற்றின் உயிர்மெய்
ஏகலும் உரித்தஃ தேகினு மியல்பே 168
சாவஎன் மொழியீற் றுயிர்மெய் சாதலும்விதி 169
பலசில எனுமிவை தம்முன் தாம்வரின்
இயல்பு மிகலும் அகரம் ஏக
லகரம் றகர மாகலும் பிறவரின்
அகரம் விகற்ப மாகலு முளபிற 170

ஆகார ஈற்றுச் சிறப்புவிதி
அல்வழி யாமா மியாமுற்று முன்மிகா

171
குறியதன் கீழ்ஆக் குறுகலும் அதனொடு
உகர மேற்றலும் இயல்புமாந் தூக்கின் 172

இகர ஈற்றுச் சிறப்புவிதி
அன்றி இன்றிஎன் வினையெஞ்சு இகரம்
தொடர்பினுள் உகர மாய்வரின் இயல்பே

173
உரிவரின் நாழியி னீற்றுயிர் மெய்கெட
மருவும் டகரம் உரியின் வழியே
உகரஉயிர் மெய்யாம் ஏற்பன வரினே 174
சுவைப்புளி முன்னின மென்மையுந் தோன்றும் 175

இகர ஐகார ஈற்றுச் சிறப்புவிதி
அல்வழி இ ஐம் முன்ன ராயின்
இயல்பு மிகலும் விகற்பமு மாகும்

176

ஈகார ஈற்றுச் சிறப்புவிதி
ஆமுன் பகரவீ அனைத்தும்வரக் குறுகும்
மேலன அல்வழி யியல்பா கும்மே

177
பவ்வீ நீமீ முன்னர் அல்வழி
இயல்பாம் வலிமெலி மிகலுமா மீக்கே 178

முற்றுகர ஈற்றுச் சிறப்புவிதி
மூன்றாறு உருபெண் வினைத்தொகை சுட்டீறு
ஆகும் உகர முன்ன ரியல்பாம்

179
அதுமுன் வரும்அன்று ஆன்றாந் தூக்கின் 180

குற்றுகர ஈற்றுச் சிறப்புவிதி
வன்றொட ரல்லன முன்மிகா அல்வழி

181
இடைத்தொட ராய்தத் தொடரொற் றிடையின்
மிகாநெடி லுயிர்த்தொடர் முன்மிகா வேற்றுமை 182
நெடிலோடு உயிர்த்தொடர்க் குற்றுக ரங்களுட்
டறஒற் றிரட்டும் வேற்றுமை மிகவே 183
மென்றொடர் மொழியுட் சிலவேற் றுமையில்
தம்மின வன்றொட ராகா மன்னே 184
ஐஈற் றுடைக்குற் றுகரமு முளவே 185
திசையொடு திசையும் பிறவுஞ் சேரின்
நிலையீற் றுயிர்மெய் கவ்வொற்று நீங்கலும்
றகரம் னலவாத் திரிதலும் ஆம்பிற 186
தெங்குநீண்டு ஈற்றுயிர் மெய்கெடுங் காய்வரின் 187
எண்நிறை யளவும் பிறவும் எய்தின்
ஒன்று முதலெட் டீறா மெண்ணுள்
முதலீ ரெண்முதல் நீளும் மூன்றாறு
ஏழ்குறு கும்ஆறு ஏழல் லவற்றின்
ஈற்றுயிர் மெய்யும் ஏழ னுயிரும்
ஏகும் ஏற்புழி யென்மனார் புலவர் 188
ஒன்றன் புள்ளி ரகர மாக
இரண்ட னொற்றுயி ரேகஉவ் வருமே 189
மூன்றனுறுப்பு அழிவும் வந்தது மாகும் 190
நான்கன் மெய்யே லறவா கும்மே 191
ஐந்தனொற் றடைவதும் இனமுங் கேடும் 192
எட்ட னுடம்புணவ் வாகும் என்ப 193
ஒன்பா னொடுபத்து நூறும் ஒன்றின்
முன்னதி னேனைய முரணி ஒவ்வொடு
தகரம் நிறீஇப்பஃ தகற்றி னவ்வை
நிரலே ணளவாத் திரிப்பது நெறியே 194
முதலிரு நான்காம் எண்முனர்ப் பத்தின்
இடையொற்று ஏக லாய்த மாகல்
எனஇரு விதியு மேற்கு மென்ப 195
ஒருபஃ தாதிமுன் னொன்றுமுத லொன்பான்
எண்ணும் அவையூர் பிறவும் எய்தின்
ஆய்தம் அழியஆண் டாகுந் தவ்வே 196
ஒன்றுமுத லீரைந் தாயிரங் கோடி
எண்நிறை யளவும் பிறவரிற் பத்தின்
ஈற்றுயிர் மெய்கெடுத் தின்னும் இற்றும்
ஏற்ப தேற்கும் ஒன்பது மினைத்தே 197
இரண்டு முன்வரிற் பத்தினீற் றுயிர்மெய்
கரந்திட ஒற்று னவ்வாகு மென்ப 198
ஒன்ப தொழித்தஎண் ஒன்பது மிரட்டின்
முன்னதின் முன்னல வோட உயிர்வரின்
வவ்வு மெய்வரின் வந்தது மிகல்நெறி 199

ஊகார ஈற்றுச் சிறப்புவிதி
பூப்பெயர் முன்னின மென்மையுந் தோன்றும்

200

ஏகார ஓகார ஈற்றுச் சிறப்புவிதி
இடைச்சொல் ஏஓ முன்வரி னியல்பே

201

ஐகார ஈற்றுச் சிறப்புவிதி
வேற்றுமை யாயின் ஐகா னிறுமொழி
ஈற்றழி வோடுமம் மேற்பவு முளவே

202
பனைமுன் கொடிவரின் மிகலும் வலிவரின்
ஐபோ யம்மும் திரள்வரி னுறழ்வும்
அட்டுறின் ஐகெட்டந் நீள்வுமாம் வேற்றுமை 203
4. மெய்யீற்றுப் புணரியல்

மெய்யீற்றின்முன் உயிர்
உடல்மே லுயிர்வந் தொன்றுவ தியல்பே

204
தனிக்குறில் முன்னொற் றுயிர்வரின் இரட்டும் 205

மெய்யீற்றின்முன் மெய்
தன்னொழி மெய்ம்முன் யவ்வரி னிகரந்
துன்னு மென்று துணிநரு முளரே

206
ஞணநம லவளன ஒற்றிறு தொழிற்பெயர்
ஏவல் வினைநனி யவ்வன் மெய்வரின்
உவ்வுறும் ஏவ லுறுசில சில்வழி 207
நவ்விறு தொழிற்பெயர்க்கு அவ்வுமாம் வேற்றுமை 208

ணகர னகர ஈறு
ணனவல் லினம்வரட் டறவும் பிறவரின்
இயல்பு மாகும் வேற்றுமைக்கு அல்வழிக்கு
அனைத்துமெய் வரினும் இயல்பா கும்மே

209
குறிலணைவு இல்லா ணனக்கள் வந்த
நகரந் திரிந்துழி நண்ணுங் கேடே 210
சாதி குழூஉப்பரண் கவண்பெய ரிறுதி
இயல்பாம் வேற்றுமைக்கு உணவுஎண் சாண்பிற
டவ்வா கலுமாம் அல்வழி யும்மே 211
னஃகான் கிளைப்பெய ரியல்பும் அஃகான்
அடைவு மாகும் வேற்றுமைப் பொருட்கே 212
மீன்றவ் வொடுபொரூஉம் வேற்றுமை வழியே 213
தேன்மொழி மெய்வரி னியல்பும் மென்மை
மேவி னிறுதி யழிவும் வலிவரின்
ஈறுபோய் வலிமெலி மிகலுமா மிருவழி 214
மரம்அல் எகின்மொழி யியல்பும் அகரம்
மருவ வலிமெலி மிகலு மாகும் 215
குயின்ஊன் வேற்றுமைக் கண்ணு மியல்பே 216
மின்பின் பன்கன் தொழிற்பெய ரனைய
கன்னவ் வேற்று மென்மையோ டுறழும் 217
தன்என் என்பவற் றீற்றுனவ் வன்மையோடு
உறழும் நின்னீ றியல்பா முறவே 218

மகர ஈறு
மவ்வீ றொற்றழிந்து உயிரீ றொப்பவும்
வன்மைக் கினமாத் திரிபவு மாகும்

219
வேற்றுமை மப்போய் வலிமெலி யுறழ்வும்
அல்வழி யுயிரிடை வரினியல் பும்முள 220
நுந்தம்
எம் நம் மீறா மவ்வரு ஞநவே 221
அகமுனர்ச் செவிகை வரினிடை யனகெடும் 222
ஈமுங்
கம்மும் உருமுந் தொழிற்பெயர் மானும்
முதலன வேற்றுமைக் கவ்வும் பெறுமே 223

யரழ ஈறு
யரழ முன்னர்க் கசதப அல்வழி
இயல்பு மிகலு மாகும் வேற்றுமை
மிகலும் இனத்தோ டுறழ்தலும் விதிமேல்

224
தமிழவ் வுறவும் பெறும்வேற் றுமைக்கே
தாழுங் கோல்வந் துறுமே லற்றே 225
கீழின்முன் வன்மை விகற்பமு மாகும் 226

லகர ளகர ஈறு
லளவேற் றுமையிற் றடவும் அல்வழி
அவற்றோ டுறழ்வும் வலிவரி னாமெலி
மேவி னணவும் இடைவரி னியல்பும்
ஆகும் இருவழி யானு மென்ப

227
குறில்வழி லளளத்தவ் வணையின் ஆய்தம்
ஆகவும் பெறூஉம் அல்வழி யானே 228
குறில்செறி யாலள அல்வழி வந்த
தகரந் திரிந்தபிற் கேடுமீ ரிடத்தும்
வருநத் திரிந்தபின் மாய்வும் வலிவரின்
இயல்புந் திரிபும் ஆவன வுளபிற 229
லளஇறு தொழிற்பெய ரீரிடத்தும் உவ்வுறா
வலிவரி நல்வழி இயல்புமா வனவுள 230
வல்லே தொழிற்பெயர் அற்றுஇரு வழியும்
பலகைநாய் வரினும் வேற்றுமைக் கவ்வுமாம் 231
நெல்லும் செல்லும் கொல்லும் சொல்லும்
அல்வழி யானும் றகர மாகும் 232
இல்லெ னின்மைச் சொற்குஐ அடைய
வன்மை விகற்பமும் ஆகா ரத்தொடு
வன்மை யாகலு மியல்பு மாகும் 233
புள்ளும் வள்ளுந் தொழிற்பெயரு மானும் 234

வகர ஈறு
சுட்டு வகரம்மூ வினமுற முறையே
ஆய்தமு மென்மையு மியல்பு மாகும்

235
தெவ்வென் மொழியே தொழிற்பெய ரற்றே
மவ்வரின் வஃகான் மவ்வு மாகும் 236

வருமொழித் தகர நகரத் திரிபு
னலமுன் றனவும் ணளமுன் டணவும்
ஆகுந் தநக்கள் ஆயுங் காலே

237

வேற்றுமைப் பொருட்புணர்ச்சியை உருபு
புணர்ச்சியோடு மாட்டெறிதல்
உருபின் முடிபவை யொக்குமப் பொருளினும்

238

புணரியல்களுக்குப் புறனடை
இடைஉரி வடசொலின் இயம்பிய கொளாதவும்
போலியும் மரூஉவும் பொருந்திய ஆற்றிற்கு
இயையப் புணர்த்தல் யாவர்க்கு நெறியே

239
5. உருபு புணரியல்
1. உருபுகள்

எட்டுருபுகளும் சாரும் இடவகையால்
இத்தனையாம் என்பது
ஒருவ னொருத்தி பலரொன்று பலஎன
வருபெய ரைந்தொடு பெயர்முதல் இருநான்கு
உருபும் உறழ்தர நாற்பதாம் உருபே

240

வேற்றுமை உருபுகள் வருவதற்குக்
காரணமும் வருமிடமும்
பெயர்வழித் தம்பொருள் தரவரும் உருபே

241
ஐம்முதலிய ஆறுருபும் நிலைமொழி
வருமொழியோடு புணருமாறு
ஒற்றுயிர் முதலீற் றுருபுகள் புணர்ச்சியின்
ஒக்குமன் னப்பெயர் வேற்றுமைப் புணர்ப்பே

242
2. சாரியை

சாரியை வருமாறு
பதமுன் விகுதியும் பதமும் உருபும்
புணர்வழி ஒன்றும் பலவுஞ் சாரியை
வருதலும் தவிர்தலும் விகற்பமு மாகும்

243

சாரியைகள் இவையென்பது
அன் ஆன் இன் அல் அற்றுஇற்று அத்துஅம்
தம் நம் நும் ஏ அ உ ஐ குன
இன்ன பிறவும் பொதுச்சா ரியையே

244

உருபு புணர்ச்சிக்குச் சிறப்புவிதி
எல்லாம் என்பது இழிதிணை யாயின்
அற்றோ டுருபின் மேலும் உறுமே
அன்றேல் நம்மிடை யடைந்தற் றாகும்

245
எல்லாரும் எல்லீரும் எனபவற் றும்மை
தள்ளி நிரலே தம் நும் சாரப்
புல்லும் உருபின் பின்ன ரும்மே 246
தான் தாம் நாம் முதல் குறுகும் யான் யாம்
நீ நீர் என் எம் நின் நும் ஆம்பிற
குவவின் அவ்வரும் நான்காறு இரட்டல 247
ஆமா கோனவ் வணையவும் பெறுமே 248
ஒன்று முதலெட் டீறா மெண்ணுர்
பத்தின்முன் ஆன்வரிற் பவ்வொற் றொழியமேல்
எல்லா மோடும் ஒன்பது மிற்றே 249
வவ்விறு சுட்டிற்கு அற்றுறல் வழியே 250
சுட்டின்முன் ஆய்த மன்வரிற் கெடுமே 251
அத்தின் அகரம் அகரமுனை யில்லை 252
3. புறனடை

சாரியைக்குப் புறனடை
இதற்குஇது சாரியை யெனின்அளவு இன்மையின்
விகுதியும் பதமும் உருபும் பகுத்துஇடை
நின்ற எழுத்தும் பதமு மியற்கையும்
ஒன்ற வுணர்த்தல் உரவோர் நெறியே

253

நான்கு புணர்ச்சிக்கும் புறனடை
விகுதி பதஞ்சா ரியைஉருபு அனைத்தினும்
உரைத்த விதியினோர்ந் தொப்பன கொளலே

254

வேற்றுமைப் புணர்ச்சிக்குப் புறனடை
இயல்பின் விகாரமும் விகாரத் தியல்பும்
உயர்திணை யிடத்து விரிந்துந் தொக்கும்
விரவுப் பெயரின் விரிந்து நின்றும்
அன்ன விறவு மாகும்ஐ உருபே

255
புள்ளியும் உயிரும் ஆயிறு சொல்முன்
தம்மி னாகிய தொழில்மொழி வரினே
வல்லினம் விகற்பமு மியல்பு மாகும் 256

எழுத்ததிகாரத்துக்குப் புறனடை
இதற்குஇது முடிபென் றெஞ்சா தியாவும்
விகுப்பள வின்மையின் விதித்தவற் றியலான்
வகுத்துரை யாதவும் வகுத்தனர் கொளலே

257
3 சொல்லதிகாரம்
1. பெயரியல்


கடவுள் வணக்கமும் அதிகாரமும்
முச்சகம் நிழற்றும் முழுமதி முக்குடை
அச்சுத னடிதொழுது அறைகுவன் சொல்லே

258
1. சொல்லின் பொது இலக்கணம்

சொல் இன்னதென்பது
ஒருமொழி தொடர்மொழி பொதுமொழி யென்றா
இருதிணை ஐம்பாற் பொருளைந் தன்னையும்
மூவகை யிடத்தும் வழக்கொடு செய்யுளின்
வௌிப்படை குறிப்பின் விரிப்பது சொல்லே

259

மூவகை மொழி
ஒருமொழி ஒருபொரு ளனவாம் தொடர்மொழி
பலபொரு ளனபொது இருமையு மேற்பன

260

இருதிணை
மக்கள் தேவர் நரகர் உயர்திணை
மற்றுயி ருள்ளவு மில்லவும் அஃறிணை

261

ஐம்பால்
ஆண்பெண் பலரென முப்பாற்று உயர்திணை

262
ஒன்றே பலஎன் றிருபாற்று அஃறிணை 263

திணைபால்களுக்குப் புறனடை
பெண்மைவிட்டு ஆணவா வுவபேடு ஆண்பால்
ஆண்மைவிட்டு அல்லது அவாவுவ பெண்பால்
இருமையும் அஃறிணை யன்னவு மாகும்

264

மூன்றிடத்துஞ் சொற்றன்னையும்
பொருளையும் உணர்த்துதல்
படர்க்கை வினைமுற்று நாமங் குறிப்பிற்
பெறப்படும் திணைபா லனைத்தும் ஏனை
இடத்துஅவற் றொருமைப் பன்மைப் பாலே

265

மூவிடம்
தன்மை முன்னிலை படர்க்கைமூ இடனே

266

வழக்கு இன்னதென்பது
இலக்கணம் உடையது இலக்கணப் போலி
மரூஉவென் றாகு மூவகை யியல்பும்
இடக்க ரடக்கல் மங்கலம் குழூஉக்குறி
எனுமுத் தகுதியோடு ஆறாம் வழக்கியல்

267

செய்யுள் இன்னதென்பது
பல்வகைத் தாதுவின் உயிர்க்குடல் போற்பல
சொல்லாற் பொருட்கிட னாக உணர்வினின்
வல்லொ ரணிபெறச் செய்வன செய்யுள்

268

குறிப்பும் வௌிப்படையும்
ஒன்றொழி பொதுச்சொல் விகாரந் தகுதி
ஆகு பெயர்அன் மொழிவினைக் குறிப்பே
முதல்தொகை குறிப்போ டின்ன பிறவும்
குறிப்பில் தருமொழி யல்லன வௌிப்படை

269
2. சொற் பாகுபாடு

சொல் இத்தனை வகைப்படுமென்பது
அதுவே
இயற்சொல் திரிசொ லியற்பிற் பெயர்வினை
எனஇரண் டாகும் இடைஉரி யடுத்து
நான்கு மாம்திசை வடசொலணு காவழி

270

இயற்சொல்
செந்தமி ழாகித் திரியா தியார்க்கும்
தம்பொருள் விளக்குந் தன்மைய இயற்சொல்

271

திரிசொல்
ஒருபொருள் குறித்த பலசொல் லாகியும்
பலபொருள் குறித்த ஒருசொல் லாகியும்
அரிதுணர் பொருளன திரிசொல் லாகும்

272

திசைச்சொல்
செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும்
ஒன்பதிற் றிரண்டினில் தமிழொழி நிலத்தினும்
தங்குறிப் பினவே திசைச்சொ லென்ப

273

வடசொல்
பொதுஎழுத் தானும் சிறப்பெழுத் தானும்
ஈரெழுத் தானு மியைவன வடசொல்

274
3. பெயர்ச்சொல்

பொயரின் பொது இலக்கணம்
இடுகுறி காரணம் மரபொடு ஆக்கம்
தொடர்ந்து தொழிலல காலந் தோற்றா
வேற்றுமைக் கிடனாய்த் திணைபா லிடத்தொன்று
ஏற்பவும் பொதுவு மாவன பெயரே

275

உயர்திணை ஆண்பாற் பெயர்
அவற்றுள்
கிளைஎண் குழூஉமுதற் பல்பொருள் திணைதேம்
ஊர்வான் அகம்புறம் முதல நிலன்யாண்டு
இருது மதிநா ளாதிக் காலம்
தோள்குழல் மார்புகண் காது முதலுறுப்பு
அளவுஅறிவு ஒப்பு வடிவு நிறங்கதி
சாதி குடிசிறப் பாதிப் பல்குணம்
ஓத லீத லாதிப் பல்வினை
இவையடை சுட்டு வினாப்பிற மற்றோடு
உற்ற னவ்வீறு நம்பி யாடூஉ
விடலை கோவேள் குரிசில் தோன்றல்
இன்னன ஆண்பெய ராகு மென்ப

276

உயர்திணைப் பெண்பாற் பெயர்
கிளைமுத லாகக் கிளந்த பொருள்களுள்
ளவ்வொற் றிகரக் கேற்ற ஈற்றவும்
தோழி செவிலி மகடூஉ நங்கை
தையலோ டின்னன பெண்பாற் பெயரே

277

உயர்திணைப் பலர்பாற் பெயர்
கிளந்த கிளைமுத லுற்றரவ் வீற்றவும்
கள்ளெ னீற்றி னேற்பவும் பிறவும்
பல்லோர் பெயரின் பகுதி யாகும்

278

அஃறிணை ஒன்றன்பாற் பெயர்
வினாச்சுட் டுடனும் வேறு மாம்பொருள்
ஆதி யுறுதுச் சுட்டணை யாய்தம்
ஒன்றெனெண் ணின்னன ஒன்றன் பெயரே

279

அஃறிணைப் பலவின்பாற் பெயர்
முன்ன ரவ்வொடு வருவை யவ்வும்
சுட்டிறு வவ்வுங் கள்ளிறு மொழியும்
ஒன்ற லெண்ணு முள்ள இல்ல
பல்ல சில்ல உளஇல பலசில
இன்னவும் பலவின் பெயரா கும்மே

280

அஃறிணை இருபாற் பொதுப்பெயர்
பால்பகா அஃறிணைப் பெயர்கள்பாற் பொதுமைய

281

இருதிணைப் பொதுப்பெயர்
முதற்பெயர் நான்குஞ் சினைப்பெயர் நான்கும்
சினைமுதற் பெயரொரு நான்கும்முறை யிரண்டும்
தன்மை நான்கும் முன்னிலை யைந்தும்
எல்லாம் தாம்தா னின்னன பொதுப்பெயர்

282

முதற்பெயர் முதலிய நான்கையும் வகுத்தல்
ஆண்மை பெண்மை ஒருமை பன்மையின்
ஆமந் நான்மைக ளாண்பெண் முறைப்பெயர்

283

திணைப்பொதுப்பெயர் பாற்பொதுவாதல்
அவற்றுள்
ஒன்றே யிருதிணைத் தன்பா லேற்கும்

284

தன்மை முன்னிலை படர்க்கைப் பெயர்கள்
தன்மை யான்நான் யாம்நாம் முன்னிலை
எல்லீர் நீயிர் நீவிர் நீர்நீ
அல்லன படர்க்கை யெல்லா மெனல்பொது

285

தொழிற்பெயருக்கும் வினையாலணையும்
பெயருக்கும் இடம் வகுத்தல்
வினையின் பெயரே படர்க்கை வினையால்
அையும் பெயரே யாண்டு மாகும்

286

பன்னிரண்டு பொதுப்பெயர்
தான்யான் நான்நீ ஒருமை பன்மைதாம்
யாம்நாம் எலாமெலீர் நீயிர்நீர் நீவிர்

287

எண்ணால்வரும் உயர்திணைப் பெயருக்குப் புறனடை
ஓருவ னொருத்திப் பெயர்மே லெண்ணில

288
ஒருவ ரென்ப துயரிரு பாற்றாய்ப்
பன்மை வினைகொளும் பாங்கிற் றென்ப 289

ஆகுபெயர்
பொருள்முத லாறோடு அளவைசொல் தானி
கருவி காரியங் கருத்த னாதியுள்
ஒன்றன் பெயரா னதற்கியை பிறிதைத்
தொன்முறை யுைரைப்பன ஆகு பெயரே

290
4. வேற்றுமை

வேற்றுாம இனைய என்பதும்
இத்துணைய என்பதும்
ஏற்கும் எவ்வகைப் பெயர்க்குமீ றாய்ப்பொருள்
வேற்றுமை செய்வன எட்டே வேற்றுமை

291

வேற்றுமையின் பெயரும் முறையும்
பெயரே ஐஆல் குஇன் அதுகண்
விளியென் றாகும் அவற்றின் பெயர்முறை

292

எழுவாயுருபு மற்ைறுயுருபுகளை ஏற்றல்
ஆற னுருபும் ஏற்குமவ் வுருபே

293

ஐ முதலிய உருபு ஏலாப் பெயர்கள்
நீயிர் நீவிர் நா னெழுவா யலபெறா

294

பெயர் வேற்றுமை
அவற்றுள்
எழுவா யுருபு திரிபில் பெயரே
வினைபெயர் வினாக்கொளல் அதன்பய னிலையே

295

இரண்டாம் வேற்றுமை
இரண்டா வதனுருபு ஐயே அதன்பொருள்
ஆக்கல் அழித்தல் அடைதல் நீத்தல்
ஒத்தல் உடைமை யாதி யாகும்

296

மூன்றாம் வேற்றுமை
மூன்றா வதனுருபு ஆலா னோடொடு
கருவி கருத்தா உடனிகழ்வு அதன்பொருள்

297

நான்காம் வேற்றுமை
நான்கா வதற்குரு பாகுங் குவ்வே
கொடைபகை நேர்ச்சி தகவுஅது வாதல்
பொருட்டுமுறை யாதியி னிதற்கிதெனல் பொருளே

298

ஐந்தாம் வேற்றுமை
ஐந்தா வதனுருபு இல்லும் இன்னும்
நீங்கலொப்பு எல்லை யேதுப் பொருளே

299

ஆறாம் வேற்றுமை
ஆற னொருமைக் கதுவும் ஆதுவும்
பன்மைக் கவ்வு முருபாம் பண்புஉறுப்பு
ஒன்றன் கூட்டம் பலவின் ஈட்டம்
திரிபி னாக்கம் ஆம்தற் கிழமையும்
பிறிதின் கிழமையும் பேணுதல் பொருளே

300

ஏழாம் வேற்றுமை
ஏழ னுருபுகண் ணாதி யாகும்
பொருள்முத லாறு மோரிரு கிழமையின்
இடனாய் நிற்ற லிதன்பொரு ளென்ப

301

கண்முதலிய உருபுகள்
கண்கால் கடையிடை தலைவாய் திசைவயின்
முன்சார் வலமிட மேல்கீழ் புடைமுதல்
பின்பாடு அளைதேம் உழைவழி யுழியுளி
உள்ளகம் புறமில் லிடப்பொரு ளுருபே

302

எட்டாம் வேற்றுமை
எட்ட னுருபே எய்துபெய ரீற்றின்
திரிபு குன்றல் மிகுத லியல்புஅயல்
திரிபு மாம்பொருள் படர்க்கை யோரைத்
தன்முக மாகத் தானழைப் பதுவே

303

விளிக்கப்படு பெயர்கள்
இ உ ஊவோடு ஐ ஓ ன ள ர ல
யவ்வீற் றுயர்திணை யோரவல் லிவற்றொடு
ணஃகா னாவீ றாகும் பொதுப்பெயர்
ஞநஒழி யனைத்தீற் றஃறிணை விளிப்பன

304
பொதுவாகிய விளியுருபு
இம்முப் பெயர்க்கண் ணியல்பும் ஏயும்
இகர நீட்சியும் உருபா மன்னே

305

விளியுருபுக்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி
ஐயிறு பொதுப்பெயர்க்கு ஆயும் ஆவும்
உருபாம் அல்லவற் றாயு மாகும்

306
ஒருசார் னவ்வீற் றுயர்திணைப் பெயர்க்கண்
அளபீ றழிவுஅயல் நீட்சி யதனொடு
ஈறு போத லவற்றோடு ஓவுறல்
ஈறழிந்து ஓவுறல் இறுதியவ் வாதல்
அதனோடு அயல்திரிந்து ஏயுறல்ஈ றழிந்து
அயலே யாதலும் விளியுறு பாகும் 307
ளஃகா னுயர்பெயர்க் களபுஈ றழிவுஅயல்
நீட்சி யிறுதி யவ்வொற் றாதல்
அயலில் அகரம்ஏ யாதலும் விளித்தனு 308
ரவ்வீற் றுயர்பெயர்க் களபெழ லீற்றயல்
அகரம் இ ஈ யாத லாண்டைஆ
ஈயாத லதனோடு ஏயுற லீற்றே
மிக்கயல் யாக்கெட் டதனயல் நீடல்
ஈற்றி னீருற லிவையுமீண் டுருபே 309
லகாரயீற் றுயர்பெயர்க்கு அளபயல் நீட்சியும்
யகார வீற்றிற் களபுமா முருபே 310
னவ்வீற் றுயர்திணை யல்லிரு பெயர்க்கண்
இறுதி யழிவத னோடுஅயல் நீட்சி 311
லளவீற் றஃறிணைப் பெயர்பொதுப் பெயர்க்கண்
ஈற்றயல் நீட்சியும் உருபா கும்மே 312

விளியுருபுகளுக்குப் புறனடை
அண்மையி னியல்பும்ஈ றழிவும் சேய்மையின்
அளபும் புலம்பின் ஓவு மாகும்

313

விளியுருபு ஏலாப் பெயர்கள்
நுவ்வொடு வினாச்சுட் டுற்ற ன ள ர
வைதுத் தாந்தா னின்னன விளியா

314

முதல்சினைத் தொடர்பின்கண் அவ்விரண்டினும்
இரண்டனுருபு வாராதெனல்
முதலை ஐயுறிற் சினையைக் கண்ணுறும்
அதுமுதற் காயிற் சினைக்குஐ யாகும்

315

ஐயுருபு முதல் சினையிரண்டினும் வாராமைக்குக்
காரணமும் மேலைச் சூத்திரப் பொருளோடு
இப்பொருளைப் பிண்டப்பொருளுக்கும் ஏற்பித்தலும்
முதலிவை சினையிவை யெனவே றுளவில
உரைப்போர் குறிப்பின அற்றே பிண்டமும்

316

உருபு மயக்கம்
யாத னுருபிற் கூறிற் றாயினும்
பொருள்செல் மருங்கின் வேற்றுமை சாரும்

317

சில வேற்றுமையுருபு
செய்யுளிடத்துத் திரிந்துவருதல்
ஐஆன்குச் செய்யுட்கு அவ்வு மாகும்
ஆகா அஃறிணைக்கு ஆனல் லாதன

318

எட்டுவேற்றுமைக்கும் முடிக்குஞ்சொல்
எல்லை யின்னும் அதுவும் பெயர்கொளும்
அல்ல வினைகொளும் நான்கே ழிருமையும்
புல்லும் பெரும்பாலும் என்மனார் புலவர்

319
2. வினையியல்
1 வினைச்சொல்

தெரிநிலை வினைச்சொல்லின்
பொது இலக்கணம்
செய்பவன் கருவி நிலஞ்செயல் காலம்
செய்பொரு ளாறுந் தருவது வினையே

320

குறிப்பு வினைச்சொல்லின் பொது இலக்கணம்
பொருள்முத லாறினுந் தோற்றிமுன் னாறனுள்
வினைமுதல் மாத்திரை விளக்கல்வினைக் குறிப்பே

321

வினைச்சொற்களின் பகுப்பு
அவைதாம்
முற்றும் பெயர்வினை எச்சமு மாகி
ஒன்றற் குரியவும் பொதுவு மாகும்

322
2. வினைமுற்று

வினைமுற்று இனையவென்பது
பொதுஇயல்பு ஆறையுந் தோற்றிப் பொருட்பெயர்
முதலறு பெயரலது ஏற்பில முற்றே

323

தெரிநிலைவினைமுற்றின் பாகுபாடு
ஒருவன்முத லைந்தையும் படர்க்கை யிடத்தும்
ஒருமைப் பன்மையைத் தன்மைமுன் னிலையினும்
முக்கா லத்தினு முரண முறையே
மூவைந் திருமூன் றாறாய் முற்று
வினைப்பத மொன்றே மூவொன் பானாம்

324

ஆண்பாற் படர்க்கை வினைமுற்று
அன்ஆ னிறுமொழி ஆண்பாற் படர்க்கை

325

பெண்பாற் படர்க்கை வினைமுற்று
அள்ஆ ளிறுமொழி பெண்பாற் படர்க்கை

326

பலர்பாற் படர்க்கை வினைமுற்று
அர்ஆர் பவ்வூ ரகரமா ரீற்ற
பல்லோர் படர்க்கைமார் வினையொடு முடிமே

327

ஒன்றன்பாற் படர்க்கை வினைமுற்று
துறுடுக் குற்றிய லுகர ஈற்ற
ஒன்றன் படர்க்கைடுக் குறிப்பி னாகும்

328

பலவின்பாற் படர்க்கை வினைமுற்று
அஆ ஈற்ற பலவின் படர்க்கை
ஆவே எதிர்மறைக் கண்ண தாகும்

329

இருதிணைப் பொதுவினை
தன்மை முன்னிலை வியங்கோள் வேறிலை
உண்டீ ரெச்சம் இருதிணைப் பொதுவினை

330

தன்மை ஒருமை வினைமுற்று
குடுதுறு என்னுங் குன்றிய லுகரமோடு
அல்அன் என்ஏன் ஆகு மீற்ற
இருதிணை முக்கூற்று ஒருமைத் தன்மை

331

தன்மைப் பன்மை வினைமுற்று
அம்ஆம் என்பன முன்னிலை யாரையும்
எம்ஏம் ஓமிவை படர்க்கை யாரையும்
உம்ஊர் கடதற இருபா லாரையும்
தன்னொடு படுக்குந் தன்மைப் பன்மை

332

வினையுடனு முடியுந்தன்மை வினைமுற்றுக்கள்
செய்கெ னெருமையுஞ் செய்குமென் பன்மையும்
வினையொடு முடியினும் விளிம்பிய முற்றே

333

உளப்பாட்டுப் பன்மை முன்னிலை
முன்னிலை கூடிய படர்க்கையு முன்னிலை

334
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஐயா யிகர ஈற்று மூன்றும்
ஏவலின் வரூஉம் எல்லா ஈற்றவும்
முப்பா லொருமை முன்னிலை மொழியே

335
முன்னிலை முன்ன ரீயும் ஏயும்
அந்நிலை மரபின் மெய்யூர்ந்து வருமே 336

முன்னிலைப் பன்மை வினைமுற்று
இர்ஈ ரீற்ற இரண்டும் இருதிணைப்
பன்மை முன்னிலை மின்னவற் றேவல்

337

வியங்கோள் வினைமுற்று
கயவொடு ரவ்வொற் றீற்ற வியங்கோள்
இயலும் இடம்பா லெங்கு மென்ப

338

வேறு இல்லை உண்டு
வேறில்லை யுண்டைம் பால்மூ விடத்தன

339
3. பெயரெச்சம்

பெயரெச்சம் இனையவென்பது
செய்த செய்கின்ற செய்யுமென் பாட்டிற்
காலமுஞ் செயலுந் தோன்றிப் பாலொடு
செய்வ தாதி அறுபொருட் பெயரும்
எஞ்ச நிற்பது பெயரெச் சம்மே

340

செய்யுமென் எச்சத்திற்கு
எய்தியதன்மேற் சிறப்புவிதி
செய்யுமென் எச்சஈற் றுயிர்மெய் சேறலுஞ்
செய்யுளுள் உம்உந்து ஆகலும் முற்றேல்
உயிரு முயிர்மெய்யும் ஏகலு முளவே

341
4. வினையெச்சம்

வினயெச்சம் இனையவென்பது
தொழிலுங் காலமுந் தோன்றிப் பால்வினை
ஒழிய நிற்பது வினையெச் சம்மே

342

வினையெச்ச வாய்பாடுகள்
செய்து செய்பு செய்யாச் செய்யூச்
செய்தெனச் செயச்செயின் செய்யிய செய்யியர்
வான்பான் பாக்கின வினையெச் சம்பிற
ஐந்தொன் றாறுமுக் காலமு முறைதரும்

343

வினையெச்சங்களுக்கு முடிபு வேறுபாடு
அவற்றுள்
முதலில் நான்கும் ஈற்றில் மூன்றும்
வினைமுதல் கொள்ளும் பிறவுமேற் கும்பிற

344

வினைமுதல் கொள்ளுமென்றவற்றிற்கு
ஒரு புறனடை
சினைவினை சினையொடும் முதலொடுஞ் செறியும்

345

சொல்திரி யினும்பொருள் திரியா வினைக்குறை 346
5. ஒழிபு

வினைக் குறிப்பு
ஆக்க வினைக்குறிப்பு ஆக்கமின்று இயலா

347

செய்யுமென் முற்று
பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மையிற்
செல்லா தாகுஞ் செய்யுமென் முற்றே

348

பாற் பொதுவினை
யாரென் வினாவினைக் குறிப்புஉயர் முப்பால்

349
எவனென் வினாவினைக் குறிப்புஇழி இருபால் 350

இருவகை முற்றிற்கும் ஒரு புறனடை
வினைமுற் றேவினை யெச்ச மாகலும்
குறிப்புமுற்று ஈரெச்ச மாகலு முளவே

351
3. பொதுவியல்
1. இது முன்வந்த பெயருக்கும் வினைக்கும்
பின்வரும் இடைக்கும் உரிக்கும்
பொதுவிலக்கணங்களைக் கூறுவது

பாற்பொதுமை நீங்குநெறி
இருதிணை ஆண்பெணுள் ஒன்றினை ஒழிக்கும்
பெயரும் வினையுங் குறிப்பி னானே

352

பெயர் வினையிடத்து ஈற்றயல் திரிதல்
பெயர்வினை யிடத்து ன ள ர ய ஈற்றயல்
ஆஓ ஆகலுஞ் செய்யுளு ளுரித்தே

353

உருபும் வினையீறும் எதிர்மறையினுந் திரியாமை
உருபும் வினையும் எதிர்மறுத்து உரைப்பினுந்
திரியா தத்தமீற் றுருபி னென்ப

354

உருபும் வினையும் அடுக்கிமுடிதல்
உருபுபல அடுக்கினும் வினைவே றடுக்கினும்
ஒருதம் எச்சம் ஈறுற முடியும்

355

இடைப் பிறவரல்
உருபு முற்றுஈ ரெச்சங் கொள்ளும்
பெயர்வினை யிடைப்பிற வரலுமாம் ஏற்பன

356

முடிக்குஞ் சொல் நிற்குமிடம்
எச்சப் பெயர்வினை எய்தும் ஈற்றினும்

357

ஒருமொழி வேறொன்றை அமைத்தல்
ஒருமொழி யொழிதன் னினங்கொளற் குரித்தே

358

திணைபாலிடப் பொதுமை நீங்கு நெறி
பொதுப்பெயர் வினைகளின் பொதுமை நீக்கும்
மேல்வருஞ் சிறப்புப் பெயர்வினை தாமே

359

எச்சங்களின் முடிபு
பெயர்வினை உம்மைசொற் பிரிப்பென ஒழியிசை
எதிர்மறை இசையெனுஞ் சொல்லொழிபு ஒன்பதுங்
குறிப்புந் தத்தம் எச்சங் கொள்ளும்

360
2. தொகைநிலைத் தொடர்மொழி

தொகைநிலைத் தொடர்மொழி இனையவென்பது
பெயரொடு பெயரும் வினையும் வேற்றுமை
முதலிய பொருளின் அவற்றி னுருபிடை
ஒழிய இரண்டு முதலாத் தொடர்ந்தொரு
மொழிபோல் நடப்பன தொகைநிலை தொடர்ச்சொல்

361

தொகைநிலைத் தொடர்ப் பாகுபாடு
வேற்றுமை வினைப்பண்பு உவமை உம்மை
அன்மொழி யெனஅத் தொகையா றாகும்

362

வேற்றுமைத் தொகை
இரண்டு முதலா மிடையா றுருபும்
வௌிப்பட லில்லது வேற்றுமைத் தொகையே

363

வினைத் தொகை
காலங் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை

364

பண்புத் தொகை
பண்பை விளக்கும் மொழிதொக் கனவும்
ஒருபொருட் கிருபெயர் வந்தவுங் குணத்தொகை

365

உவமத் தொகை
உவம உருபிலது உவமத் தொகையே

366

உவம உருபுகள்
போலப் புரைய ஒப்ப உறழ
மானக் கடுப்ப இயைய ஏய்ப்ப
நேர நிகர அன்ன இன்ன
என்பவும் பிறவும் உவமத் துருபே

367

உம்மைத் தொகை
எண்ணல் எடுத்தல் முகத்தல் நீட்டல்
எனுநான் களவையு ளும்மிலது அத்தொகை

368

அன்மொழித் தொகை
ஐந்தொகை மொழிமேற் பிறதொக லன்மொழி

369

தொகைநிலைத் தொடர் மொழிகளிற்
பொருற்சிறக்கும் இடங்கள்
முன்மொழி பின்மொழி பன்மொழி புறமொழி
எனுநான் கிடத்துஞ் சிறக்குந் தொகைப்பொருள்

370

இடத்தொகை பெயர்த்தொகைகட்கு
வேறுபாடறிகுறி
வல்லொற்று வரினே யிடத்தொகை யாகும்
மெல்லொற்று வரினே பெயர்த்தொகை யாகும்

371

உம்மைத்தொகைக்கு புறநடை
உயர்திணை உம்மைத் தொகைபல ரீறே

372

தொகைநிலைத் தொடர் மொழிகள்
பலபொருள் படுதல்
தொக்குழி மயங்குந இரண்டு முதலேழ்
எல்லைப் பொருளின் மயங்கு மென்ப

373
3. தொகாநிலைத் தொடர்மொழி
முற்றுஈ ரெச்சம் எழுவாய் விளிப்பொருள்
ஆறுரு பிடையுரி யடுக்கிவை தொகாநிலை 374
4. வழாநிலை வழுவமைதி

வழு விகற்பங்கள்
திணையே பாலிடம் பொழுது வினாஇறை
மரபா மேழு மயங்கினாம் வழுவே

375

திணையோடு வினாவிடையும் பாலோடு
வினாவிடையும் வழுவாமற் காத்தல்
ஐயந் திணைபா லவ்வப் பொதுவினும்
மெய்தெரி பொருள்மே லன்மையும் விளம்புப

376

திணை வழுவமைதி
உயர்திணை தொடர்ந்த பொருள்முத லாறும்
அதனொடு சார்த்தி னத்திணை முடிபின

377

திணைபால்மரபு வழுவமைதி
திணைபால் பொருள்பல விரவின சிறப்பினும்
மிகவினும் இழிபினும் ஒருமுடி பினவே

378

திணைபால் வழுவமைதி
உவப்பினும் உயர்வினுஞ் சிறப்பினுஞ் செறலினும்
இழிப்பினும் பால்திணை யிழுக்கினு மியல்பே

379

பாலிட வழுவமைதி
ஒருமையிற் பன்மையும் பன்மையி னொருமையும்
ஓரிடம் பிறவிடந் தழுவலு முளவே

380

இடம் வழுவாமற் காத்தல்
தரல்வரல் கொடைசெலல் சாரும் படர்க்கை
எழுவா யிரண்டும் எஞ்சிய ஏற்கும்

381

காலம்
இறப்புஎதிர்வு நிகழ்வெனக் கால மூன்றே

382

கால வழுவமைதி
முக்கா லத்தினும் ஒத்தியல் பொருளைச்
செப்புவர் நிகழுங் காலத் தானே

383

விரைவினு மிகவினுந் தௌிவினும் இயல்பினும்
பிறழவும் பெறூஉமுக் காலமும் ஏற்புழி 384

அறுவகை வினா
அறிவுஅறி யாமை ஐயுறல் கொளல்கொடை
ஏவல் தரும்வினா ஆறும் இழுக்கார்

385

எண்வகை விடை
சுட்டு மறைநே ரேவல் வினாதல்
உற்றது உரைத்தல் உறுவது கூறல்
இனமொழி யெனுமெண் ணிறையு ளிறுதி
நிலவிய ஐந்துமப் பொருண்மையி னேர்ப

386

வினாவிடைகளின் முதல்சினை வழுவாமை
வினாவினுஞ் செப்பினும் விரவா சினைமுதல்

387

மரபு
எப்பொரு ளெச்சொலின் எவ்வா றுயர்ந்தோர்
செப்பின ரப்படிச் செப்புதல் மரபே

388

மரபு வழாநிலை
வேறுவினைப் பல்பொருள் தழுவிய பொதுச்சொலும்
வேறவற் றெண்ணுமோர் பொதுவினை வேண்டும்

389

வினைசார்பு இனமிட மேவி விளங்காப்
பலபொரு ளொருசொற் பணிப்பர் சிறப்பெடுத்தே 390

எழுத்தியல் திரியாப் பொருள்திரி புணர்மொழி
இசைத்திரி பாற்றௌிவு எய்து மென்ப 391

மரபு வழாநிலையும் வழுவமைதியும்
ஒருபொருள் மேற்பல பெயர்வரி னிறுதி
ஒருவினை கொடுப்ப தனியு மொரோவழி

392

திணைநிலஞ் சாதி குடியே யுடைமை
குணந்தொழில் கல்வி சிறப்பாம் பெயரோடு
இயற்பெய ரேற்றிடிற் பின்வரல் சிறப்பே 393

படர்க்கை முப்பெயரோடு அணையிற் சுட்டுப்
பெயர்பின் வரும்வினை யெனிற்பெயர்க் கெங்கும்
மருவும் வழக்கிடைச் செய்யுட் கேற்புழி 394

அசைநிலை பொருள்நிலை யிசைநிறைக் கொருசொல்
இரண்டு மூன்றுநான் கெல்லைமுறை யடுக்கும் 395

மரபு வழாநிலை
இரட்டைக் கிளவி இரட்டிற்பிரிந்து இசையா

396
ஒருபொருட் பல்பெயர் பிரிவில வரையர் 397

மரபு வழுவமைதி
ஒருபொருட் பன்மொழி சிறப்பினின்வழா

398

மரபு வழுவாமற் காத்தல்
இனைத்தென் றறிபொரு ளுலகின்இலாப் பொருள்
வினைப்படுத் துரைப்பி னும்மை வேண்டும்

399

மரபு வழுவமைதி
செயப்படு பொருளைச் செய்தது போலத்
தொழிற்படக் கிளத்தலும் வழக்கினு ளுரித்தே

400

மரபு வழுவாமற் காத்தலும் மரபு வழுவமைதியும்
பொருள்முத லாறாம் அடைசேர் மொழியினம்
உள்ளவு மில்லவு மாமிரு வழக்கினும்

401
மரபு வழுவாமற் காத்தல்
அடைமொழி யினமல் லதுந்தரும் ஆண்டுறின்

402

மரபு வழுவாமற்காத்தலும் மரபு வழுவமைதியும்
அடைசினை முதல்முறை யடைதலு மீரடை
முதலோ டாதலும் வழக்கிய லீரடை
சினையொடு செறிதலும் மயங்கலுஞ் செய்யுட்கே

403

மரபு வழுவமைதி
இயற்கைப் பொருளை யிற்றெனக் கிளத்தல்

404

மரபு வழுவாமற் காத்தலும் வழுவமைதியும்
காரண முதலா ஆக்கம் பெற்றும்
காரண மின்றி ஆக்கம் பெற்றும்
ஆக்க மின்றிக் காரணம் அடுத்தும்
இருமையும் இன்றியு மியலுஞ் செயும்பொருள்

405

மரபு வழுவாமற் காத்தல்
தம்பா வில்லது இல்லெனி னினனாய்
உள்ளது கூறி மாற்றியும் உள்ளது
சுட்டியும் உரைப்பர் சொற்சுருங் குதற்கே

406

ஈ தா கொடுஎனும் மூன்றும் முறையே
இழிந்தோ னொப்போன் மிக்கோ னிரப்புரை 407

மரபு வழுவமைதி
முன்னத்தி னுணருங் கிளவியு முளவே

408

கேட்குந போலவும் கிளக்குந போலவும்
இயங்குந போலவும் இயற்றுந போலவும்
அஃறிணை மருங்கினும் அறையப் படுமே 409

உருவக உவமையில் திணைசினை முதல்கள்
பிறழ்தலும் பிறவும் பேணினர் கொளலே 410
5. பொருள் கோள்

பொருள்கோளின் பெயருந் தொகையும்
யாற்றுநீர் மொழிமாற்று நிரனிறை விற்பூண்
தாப்பிசை அளைமறி பாப்புக் கொண்டுகூட்டு
அடிமறி மாற்றெனப் பொருள்கோ ளெட்டே

411

யாற்றுநீர்ப் பொருள்கோள்
மற்றைய நோக்காது அடிதொறும் வான்பொருள்
அற்றற் றெழுகுமஃ தியாற்றுப் புனலே

412

மொழிமாற்றுப் பொருள்கோள்
ஏற்ற பொருளுக் கியையு மொழிகளை
மாற்றியோ ரடியுள் வழங்கல்மொழி மாற்றே

413

நிரனிறை பொருள்கோள்
பெயரும் வினையுமாஞ் சொல்லையும் பொருளையும்
வேறு நிரல்நிறீஇ முறையினும் எதிரினும்
நேரும் பொருள்கோள் நிரனிறை நெறியே

414

பூட்டுவிற் பொருள் கோள்
எழுவா யிறுதி நிலைமொழி தம்முள்
பொருள்நோக் குடையது பூட்டுவில் லாகும்

415

தாப்பிசைப் பொருள்கோள்
இடைநிலை மொழியே ஏணையீ ரிடத்தும்
நடந்து பொருளை நண்ணுதல் தாப்பிசை

416

அளைமறிபாப்புப் பொருள்கோள்
செய்யு ளிறுதி மொழியிடை முதலிலும்
எய்திய பொருள்கோ ளளைமறி பாப்பே

417

கொண்டுகூட்டுப் பொருள்கோள்
யாப்படி பலவினுங் கோப்புடை மொழிகளை
ஏற்புழி யிசைப்பது கொண்டு கூட்டே

418

அடிமறிமாற்றுப் பொருள்கோள்
ஏற்புழி யெடுத்துடன் கூட்டுறும் அடியவும்
யாப்பீ றிடைமுத லாக்கினும் பொருளிசை
மாட்சியு மாறா அடியவும் அடிமறி

419
4. இடையியல்

இடைச் சொல்லின் பொது இலக்ணம்
வேற்றுமை வினைசா ரியையொப் புருபுகள்
தத்தம் பொருள இசைநிறை அசைநிலை
குறிப்பெனெண் பகுதியிற் றனித்திய லின்றிப்
பெயரினும் வினையினும் பின்முன் னோரிடத்து
ஒன்றும் பலவும்வந் தொன்றுவ திடைச்சொல்

420

இடைச்சொற் பொருட்கள்
தெரிநிலை தேற்றம் ஐயம்முற்று எண்சிறப்பு
எதிர்மறை யெச்சம் வினாவிழைவு ஒழியிசை
பிரிப்புக் கழிவுஆக்கம் இன்னன இடைப்பொருள்

421

ஏகார இடைச்சொல்
பிரிநிலை வினாஎண் ணீற்றசை தேற்றம்
இசைநிறை யெனஆ றேகா ரம்மே

422

ஓகார இடைச்சொல்
ஒழியிசை வினாச்சிறப் பெதிர்மறை தெரிநிலை
கழிவுஅசை நிலைபிரிப் பெனஎட் டோவே

423

என என்று இடைச்சொற்கள்
வினைபெயர் குறிப்பிசை எண்பண் பாறினும்
எனஎனு மொழிவரும் என்றும் அற்றே

424

உம்மை இடைச்சொல்
எதிர்மறை சிறப்பையம் எச்சமுற் றளவை
தெரிநிலை யாக்கமோ டும்மை எட்டே

425

முற்றும்மைக்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி
முற்றும்மை ஒரோவழி எச்சமு மாகும்

426

எச்ச உம்மைக் காவதோர் விதி
செவ்வெண் ஈற்றதாம் எச்ச வும்மை

427

சில எண்ணிடைச்சொற்களுக்
காவதோர் இலக்கணம்
பெயர்ச்செவ் வெண்ஏ என்றா எனாஎண்
நான்குந் தொகைபெறும் உம்மையென் றெனவோடு
இந்நான் கெண்ணுமஃ தின்றியு மியலும்

428

சில எண்ணிடச்சொற்களுக்கு
எய்தியதன்மேற் சிறப்புவிதி
என்றும் எனவும் ஒடுவும் ஒரோவழி
நின்றும் பிரிந்தெண் பொருடொறு நேரும்

429

பெயரொடு வரும்இடைச்சொற்கள்
வினையொடும் வருமாறு
வினையொடு வரினுமெண் ணினைய ஏற்பன

430

தில்லிடைச்சொல்
விழைவே காலம் ஒழியிசை தில்லே

431

மன்னிடைச்சொல்
மன்னே அசைநிலை ஒழியிசை ஆக்கங்
கழிவு மிகுதி நிலையே றாகும்

432

மற்றென்னும் இடைச்சொல்
வினைமாற் றசைநிலை பிறிதெனு மற்றே

433

முன்னதற்கோர் புறனடை
மற்றைய தென்பது சுட்டிய தற்கினம்

434

கொல்லிடைச்சொல்
கொல்லே ஐயம் அசைநிலைக் கூற்றே

435

ஒடு தெய்ய
ஒடுவுந் தெய்யவும் இசைநிறை மொழியே

436

அந்தில் ஆங்கு
அந்திலாங் கசைநிலை யிடப்பொரு ளவ்வே

437

அம்ம இடைச்சொல்
அம்ம உரையசை கேண்மினென் றாகும்

438

வியங்கோளசை
மாஎன் கிளவி வியங்கோ ளசைச்சொல்

439

முன்னிலையசைச்சொல்
மியாஇக மோமதி அத்தை இத்தை
வாழிய மாளஈ யாழமுன் னிலையசை

440

எல்லா இடத்தும் வரும் அசைச்சொல்
யாகா பிறபிறக்கு அரோபோ மாதுஇகும்
சின்குரை யோரும் போலு மிருந்துஇட்டு
அன்றாந் தாந்தான் கின்றுநின் றசைமொழி

441
5. உரியியல்
உரிச்சொல்லின் பொது இலக்கணம்
பல்வகைப் பண்பும் பகர்பெய ராகி
ஒருகுணம் பலகுணந் தழுவிப் பெயர்வினை
ஒருவா செய்யுட் குரியன உரிச்சொல்

442

பண்பிது என்பது
உயிருயி ரல்லதாம் பொருட்குணம் பண்பே

443

உயிர்ப்பொருள்
மெய்ந்நா மூக்கு நாட்டஞ் செவிகளின்
ஒன்றுமுத லாக்கீழ்க் கொண்டுமே லுணர்தலின்
ஒரறி வாதியா வுயிரைந் தாகும்

444

ஓரறிவுயிர்
புல்மரம் முதலஉற்று அறியுமோர் அறிவுயிர்

445

ஈரறிவுயிர்
முரள்நந்து ஆதிநா அறிவொடீ ரறிவுயிர்

446

மூவறிவுயிர்
சிதலெறும் பாதிமூக் கறிவின்மூ வறிவுயிர்

447
நாலறிவுயிர்
தும்பிவெண் டாதிகண் ணறிவின்நா லறிவுயிர்

448

ஐயறிவுயிர்
வானவர் மக்கள் நரகர் விலங்குபுள்
ஆதிசெவி யறிவோ டையறி வுயிரே

449

உயிரில்லாத பொருள்
உணர்விய லாமுயி ரொன்று மொழித்த
உடன்முத லனைத்தும் உயிரல் பொருளே

450

முன்னதற்கு ஒரு புறனடை
ஒற்றுமை நயத்தின் ஒன்றெனத் தோன்றினும்
வேற்றுமை நயத்தின் வேறே உடலுயிர்

451

உயிர்ப்பொருள்களின் குணப்பண்பு
அறிவுஅரு ளாசை யச்சம் மானம்
நிறைபொறை ஓர்ப்புக் கடைப்பிடி மையல்
நினைவு வெறுப்புவப் பிரக்கநாண் வெகுளி
துணிவுஅழுக் காறன்பு எளிமை யெய்த்தல்
துன்ப மின்ப மிளமை மூப்பிகல்
வென்றி பொச்சாப் பூக்க மறமதம்
மறவி யினைய உடல்கொ ளுயிர்க்குணம்

452

உயிர்ப் பொருள்களின் தொழிற்பண்பு
துய்த்தல் துஞ்சல் தொழுத லணிதல்
உய்த்த லாதி உடலுயிர்த் தொழிற்குணம்

453

உயிரல் பொருள்களின் குணப்பண்பு
பல்வகை வடிவுஇரு நாற்றம்ஐ வண்ணம்
அறுசுவை யூறெட் டுயிரல் பொருட்குணம்

454
இருபொருள்களுக்கும் பொதுவாகிய
தொழிற்பண்பு
தோன்றல் மறைதல் வளர்தல் சுருங்கல்
நீங்க லடைதல் நடுங்க லிசைத்தல்
ஈத லின்னன இருபொருட் டொழிற்குணம்

455

ஒருகுணந் தழுவிய உரிச்சொல்
சால உறுதவ நனிகூர் கழிமிகல்

456

பலகுணந் தழுவிய உரிச்சொல்
கடியென் கிளவி காப்பே கூர்மை
விரையே விளக்கம் அச்சஞ் சிறப்பே
விரைவே மிகுதி புதுமை யார்த்தல்
வரைவே மன்றல் லரிப்பி னாகும்

457

ஒருகுணந் தழுவிய உரிச்சொல்
மாற்றம் நுவற்சிசெப் புரைகரை நொடியிசை
கூற்றுப் புகறல் மொழிகிளவி விளம்பறை
பாட்டுப் பகர்ச்சி யியம்பல் சொல்லே

458

முழக்குஇரட் டொலிகலி இசைதுவை பிளிறிரை
இரக்கழுங் கியம்ப லிமிழ்குளி றதிர்குரை
கனைசிலை சும்மை கௌவை கம்பலை
அரவ மார்ப்போ டின்னன ஓசை 459

இவ்வியலுக்குப் புறனடை
இன்ன தின்னுழி யின்னண மியலும்
என்றிசை நூலுட் குணகுணிப் பெயர்கள்
சொல்லாம் பரத்தலிற் பிங்கல முதலா
நல்லோ ருரிச்சொலின் நயந்தனர் கொளலே

460

இவ்வதிகாரத்துக்குப் புறனடை
சொற்றொறு மிற்றிதன் பெற்றியென் றனைத்தும்
முற்ற மொழிகுறின் முடிவில ஆதலிற்
சொற்றவற் றியலான் மற்றைய பிறவும்
தெற்றென வுணர்தல் தெள்ளியோர் திறனே

461

இந்நூலுக்குப் புறனடை
பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னானே

462

மேலும் வாசிக்க...

நன்னூல் - பவணந்தி முனிவர்

சிறப்புப் பாயிரம்

மலர் தலை உலகின் மல்கு இருள் அகல
இலகு ஒளி பரப்பி யாவை உம் விளக்கும்
பரிதி இன் ஒரு தான் ஆகி முதல் ஈறு
ஒப்பு அளவு ஆசை முனிவு இகந்து உயர்ந்த
அற்புத மூர்த்தி தன் அலர்தரு தன்மையின்

(5)

மன இருள் இரிய மாண் பொருள் முழுவது உம்
முனிவு அற அருளிய மூ அறு மொழி உள் உம்
குண கடல் குமரி குடகம் வேங்கடம்
எனும் நான்கு எல்லையின் இரும் தமிழ் கடல் உள்
அரும் பொருள் ஐந்து ஐ உம் யாவர் உம் உணர

(10)

தொகை வகை விரியின் தருக என துன்னார்
இகல் அற நூறி இரு நிலம் முழுவது உம்
தனது என கோலி தன் மத வாரணம்
திசை தொறு உம் நிறுவிய திறல் உறு தொல் சீர்
கரும் கழல் வெண் குடை கார் நிகர் வண் கை

(15)

திருந்திய செங்கோல் சீயகங்கன்
அரும் கலை விநோதன் அமரா பரணன்
மொழிந்தனன் ஆக முன்னோர் நூலின்
வழி ஏ நன்னூல் பெயரின் வகுத்தனன்
பொன் மதில் சனகை சன்மதி முனி அருள்

(20)

பன்ன அரும் சிறப்பின் பவணந்தி
என்னும் நாமத்து இரும் தவத்தோன் ஏ

1. பொதுப் பாயிரம்
முகவுரை பதிகம் அணிந்துரை நூன்முகம்
புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம்

1

பாயிரம் பொது சிறப்பு என இரு பாற்று ஏ

2

நூல் ஏ நுவல்வோன் நுவலும் திறன் ஏ
கொள்வோன் கோடல் கூற்று ஆம் ஐந்து உம்
எல்லா நூல் கு உம் இவை பொது பாயிரம்

3


1.1. நூலினது வரலாறு

நூலின் இயல்பு ஏ நுவலின் ஓர் இரு
பாயிரம் தோற்றி மும்மையின் ஒன்று ஆய்
நால் பொருள் பயத்து ஓடு எழு மதம் தழுவி
ஐ இரு குற்றம் உம் அகற்றி அ மாட்சி ஓடு
எண் நான்கு உத்தியின் ஓத்து படலம்
என்னும் உறுப்பின் இல் சூத்திரம் காண்டிகை
விருத்தி ஆகும் விகற்ப நடை பெறும் ஏ

4

முதல் வழி சார்பு என நூல் மூன்று ஆகும்

5

அவற்று உள்
வினை இன் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதல்நூல் ஆகும்

6

முன்னோர் நூலின் முடிபு ஒருங்கு ஒத்து
பின்னோன் வேண்டும் விகற்பம் கூறி
அழியா மரபினது வழிநூல் ஆகும்

7

இருவர் நூல் கு உம் ஒரு சிறை தொடங்கி
திரிபு வேறு உடையது புடைநூல் ஆகும்

8

முன்னோர் மொழி பொருள் ஏ அன்றி அவர் மொழி உம்
பொன் ஏ போல் போற்றுவம் என்பதன் உம் - முன்னோர் இன்
வேறு நூல் செய்தும் எனும் மேற்கோள் இல் என்பதன் கு உம்
கூறு பழம் சூத்திரத்தின் கோள்

9

அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூல் பயன் ஏ

10

எழு வகை மதம் ஏ உடன்படல் மறுத்தல்
பிறர் தம் மதம் மேற்கொண்டு களைவு ஏ
தாஅன் நாட்டித் தனாது நிறுப்பு ஏ
இருவர் மாறுகோள் ஒரு தலை துணிவு ஏ
பிறர் நூல் குற்றம் காட்டல் ஏனை
பிறிதொடு படாஅன் தன் மதம் கொளல் ஏ

11

குன்றக் கூறல் மிகைபடக் கூறல்
கூறியது கூறல் மாறுகொளக் கூறல்
வழூஉச்சொல் புணர்த்தல் மயங்க வைத்தல்
வெற்று எனத் தொடுத்தல் மற்று ஒன்று விரித்தல்
சென்று தேய்ந்து இறுதல் நின்று பயன் இன்மை
என்று இவை ஈர் ஐம் குற்றம் நூல் கு ஏ

12

சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல்
நவின்றோர்க்கு இனிமை நல் மொழி புணர்த்தல்
ஓசை உடைமை ஆழம் உடைத்து ஆதல்
முறையின் வைப்பு ஏ உலகம் மலையாமை
விழுமியது பயத்தல் விளங்கு உதாரணத்தது
ஆகுதல் நூலின் கு அழகு எனும் பத்து ஏ

13

நுதலிப் புகுதல் ஓத்து முறை வைப்பு ஏ
தொகுத்துச் சுட்டல் வகுத்துக் காட்டல்
முடித்துக் காட்டல் முடிவு இடம் கூறல்
தான் எடுத்து மொழிதல் பிறன் கோள் கூறல்
சொல் பொருள் விரித்தல் தொடர்ச்சொல் புணர்த்தல் (5)
இரட்டுற மொழிதல் ஏதுவின் முடித்தல்
ஒப்பின் முடித்தல் மாட்டெறிந்து ஒழுகல்
இறந்தது விலக்கல் எதிரது போற்றல்
முன் மொழிந்து கோடல் பின்னது நிறுத்தல்
விகற்பத்தின் முடித்தல் முடிந்தது முடித்தல் (10)
உரைத்தும் என்றல் உரைத்தாம் என்றல்
ஒரு தலை துணிதல் எடுத்துக்காட்டல்
எடுத்த மொழியின் எய்த வைத்தல்
இன்னது அல்லது இது என மொழிதல்
எஞ்சிய சொல்லின் எய்தக் கூறல் (15)
பிற நூல் முடிந்தது தான் உடன்படுதல்
தன் குறி வழக்கம் மிக எடுத்து உரைத்தல்
சொல்லின் முடிவின் அப் பொருள் முடித்தல்
ஒன்று இனம் முடித்தல் தன் இனம் முடித்தல்
உய்த்துணர வைப்பு என உத்தி எண் நான்கு ஏ (20)

14

நூல் பொருள் வழக்கு ஒடு வாய்ப்ப காட்டி
ஏற்புழி அறிந்து இதன் கு இ வகை ஆம் என
தகும் வகை செலுத்துதல் தந்திர உத்தி

15

நேர் இன மணி ஐ நிரல்பட வைத்தாங்கு
ஓர் இன பொருள் ஐ ஒரு வழி வைப்பது
ஓத்து என மொழிப உயர் மொழி புலவர்

16

ஒரு நெறி இன்றி விரவிய பொருள் ஆல்
பொது மொழி தொடரின் அது படலம் ஆகும்

17

சில் வகை எழுத்து இல் பல் வகை பொருள் ஐ
செவ்வன் ஆடி இன் செறித்து இனிது விளக்கி
திட்பம் நுட்பம் சிறந்தன சூத்திரம்

18

ஆற்று ஒழுக்கு அரிமா நோக்கம் தவளைப்
பாய்த்து பருந்தின் வீழ்வு அன்ன சூத்திர நிலை

19

பிண்டம் தொகை வகை குறி ஏ செய்கை
கொண்டு இயல் புறனடை கூற்றன சூத்திரம்

20

பாடம் கருத்து ஏ சொல் வகை சொல் பொருள்
தொகுத்துரை உதாரணம் வினா விடை விசேடம்
விரிவு அதிகாரம் துணிவு பயன் ஓடு
ஆசிரியவசனம் என்ற ஈர் ஏழ் உரை ஏ

21

கருத்து பதப்பொருள் காட்டு மூன்றின் உம்
அவற்று ஒடு வினா விடை ஆக்கல் ஆன் உம்
சூத்திரத்து உள் பொருள் தோற்றுவ காண்டிகை

22

சூத்திரத்து உள் பொருள் அன்றி உம் ஆண்டை கு
இன்றி அமையா யாவை உம் விளங்க
தன் உரை ஆன் உம் பிற நூல் ஆன் உம்
ஐயம் அகல ஐம் காண்டிகை உறுப்பு ஒடு
மெய்யின் ஐ எஞ்சாது இசைப்பது விருத்தி

23

பஞ்சி தன் சொல் ஆ பனுவல் இழை ஆக
செம் சொல் புலவன் ஏ சேயிழை ஆ - எஞ்சாத
கை ஏ வாய் ஆக கதிர் ஏ மதி ஆக
மை இலா நூல் முடியும் ஆறு

24

உரத்தின் வளம் பெருக்கி உள்ளிய தீமை
புரத்தின் வளம் முருக்கி பொல்லா - மரத்தின்
கன கோட்டம் தீர்க்கும் நூல் அஃது ஏ போல் மாந்தர்
மன கோட்டம் தீர்க்கும் நூல் மாண்பு

25


1.2. ஆசிரியனது வரலாறு

குலன் அருள் தெய்வம் கொள்கை மேன்மை
கலை பயில் தௌிவு கட்டுரை வன்மை
நிலம் மலை நிறைகோல் மலர் நிகர் மாட்சி உம்
உலகு இயல் அறிவு ஓடு உயர் குணம் இனைய உம்
அமைபவன் நூல் உரை ஆசிரியன் ஏ

26

தெரிவு அரும் பெருமை உம் திண்மை உம் பொறை உம்
பருவ முயற்சி அளவு இல் பயத்தல் உம்
மருவிய நல் நில மாண்பு ஆகும் ஏ

27

அளக்கல் ஆகா அளவு உம் பொருள் உம்
துளக்கல் ஆகா நிலை உம் தோற்றம் உம்
வறப்பின் உம் வளம் தரும் வண்மை உம் மலை கு ஏ

28

ஐயம் தீர பொருள் ஐ உணர்த்தல் உம்
மெய் நடு நிலை உம் மிகும் நிறைகோல் கு ஏ

29

மங்கலம் ஆகி இன்றி அமையாது
யாவர் உம் மகிழ்ந்து மேற்கொள மெல்கி
பொழுதின் முகம் மலர்வு உடையது பூ ஏ

30

மொழி குணம் இன்மை உம் இழி குண இயல்பு உம்
அழுக்காறு அவா வஞ்சம் அச்சம் ஆடல் உம்
கழல் குடம் மடல் பனை பருத்தி குண்டிகை
முட தெங்கு ஒப்பு என முரண் கொள் சிந்தை உம்
உடையோர் இலர் ஆசிரியர் ஆகுதல் ஏ

31

பெய்த முறை அன்றி பிறழ உடன் தரும்
செய்தி கழல் பெய் குடத்தின் சீர் ஏ

32

தான் ஏ தர கொளின் அன்றி தன் பால்
மேவி கொள கொடா இடத்தது மடல் பனை

33

அரிதின் பெய கொண்டு அ பொருள் தான் பிறர் கு
எளிது ஈவு இல்லது பருத்தி குண்டிகை

34

பல் வகை உதவி வழிபடு பண்பின்
அல்லோர் கு அளிக்குமது முட தெங்கு ஏ

35

1.3. பாடஞ்சொல்லலின் வரலாறு

ஈதல் இயல்பு ஏ இயம்பும் காலை
காலம் உம் இடன் உம் வாலிதின் நோக்கி
சிறந்த உழி இருந்து தன் தெய்வம் வாழ்த்தி
உரைக்கப்படும் பொருள் உள்ளத்து அமைத்து
விரையான் வெகுளான் விரும்பி முகம் மலர்ந்து
கொள்வோன் கொள் வகை அறிந்து அவன் உளம் கொள
கோட்டம் இல் மனத்தின் நூல் கொடுத்தல் என்ப

36

1.4. மாணாக்கனது வரலாறு

தன் மகன் ஆசான் மகன் ஏ மன் மகன்
பொருள் நனி கொடுப்போன் வழிபடுவோன் ஏ
உரைகோளாளன் கு உரைப்பது நூல் ஏ

37

அன்னம் ஆ ஏ மண் ஒடு கிளி ஏ
இல்லி குடம் ஆடு எருமை நெய் அரி
அன்னர் தலை இடை கடை மாணாக்கர்

38

களி மடி மானி காமி கள்வன்
பிணியன் ஏழை பிணக்கன் சினத்தன்
துயில்வோன் மந்தன் தொல் நூல் கு அஞ்சி
தடுமாறு உளத்தன் தறுகணன் பாவி
படிறன் இன்னோர் கு பகரார் நூல் ஏ

39

1. 5. பாடம் கேட்டலின் வரலாறு

கோடல் மரபு ஏ கூறும் காலை
பொழுது ஒடு சென்று வழிபடல் முனியான்
குணத்து ஒடு பழகி அவன் குறிப்பின் சார்ந்து
இரு என இருந்து சொல் என சொல்லி
பருகுவன் அன்ன ஆர்வத்தன் ஆகி
சித்திர பாவை இன் அ தகவு அடங்கி
செவி வாய் ஆக நெஞ்சு களன் ஆக
கேட்டவை கேட்டு அவை விடாது உளத்து அமைத்து
போ என போதல் என்மனார் புலவர்

40

நூல் பயில் இயல்பு ஏ நுவலின் வழக்கு அறிதல்
பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல்
ஆசான் சார்ந்து அவை அமைவர கேட்டல்
அ மாண்பு உடையோர் தம் ஒடு பயிறல்
வினாதல் வினாயவை விடுத்தல் என்ற இவை
கடன் ஆ கொளின் ஏ மடம் நனி இகக்கும்

41

ஒரு குறி கேட்போன் இரு கால் கேட்பின்
பெருக நூல் இல் பிழைபாடு இலன் ஏ

42

மு கால் கேட்பின் முறை அறிந்து உரைக்கும்

43

ஆசான் உரைத்தது அமைவர கொளின் உம்
கால் கூறு அல்லது பற்றலன் ஆகும்

44

அ வினையாளர் ஒடு பயில் வகை ஒரு கால்
செவவிதின் உரைப்ப அவ் இரு கால் உம்
மை அறு புலமை மாண்பு உடைத்து ஆகும்

45

அழல் இன் நீங்கான் அணுகான் அஞ்சி
நிழல் இன் நீங்கான் நிறைந்த நெஞ்சம் ஓடு
எ திறத்து ஆசான் உவக்கும் அ திறம்
அறத்து இன் திரியா படர்ச்சி வழிபாடு ஏ

46

1. 6. சிறப்புப் பாயிரத்திலக்கணம்

ஆக்கியோன் பெயர் ஏ வழி ஏ எல்லை
நூல் பெயர் யாப்பு ஏ நுதலிய பொருள் ஏ
கேட்போர் பயன் ஓடு ஆய் எண் பொருள் உம்
வாய்ப்ப காட்டல் பாயிரத்து இயல்பு ஏ

47

காலம் களன் ஏ காரணம் என்று இ
மூ வகை ஏற்றி மொழிநர் உம் உளர் ஏ

48

முதல்நூல் கருத்தன் அளவு மிகுதி
பொருள் செய்வித்தோன் தன்மை முதல் நிமித்தின் உம்
இடுகுறி ஆன் உம் நூல் கு எய்தும் பெயர் ஏ

49

தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்ப்பு
என தகும் நூல் யாப்பு ஈர் இரண்டு என்ப

50

தன் ஆசிரியன் தன் ஒடு கற்றோன்
தன் மாணாக்கன் தகும் உரைகாரன் என்ற
இன்னோர் பாயிரம் இயம்புதல் கடன் ஏ

51

தோன்றா தோற்றி துறை பல முடிப்பின் உம்
தான் தன் புகழ்தல் தகுதி அன்று ஏ

52

மன் உடை மன்றத்து ஓலைத்தூக்கின் உம்
தன் உடை ஆற்றல் உணரார் இடையின் உம்
மன்னிய அவை இடை வெல்லுறு பொழுதின் உம்
தன் ஐ மறுதலை பழித்த காலை உம்
தன் ஐ புகழ்தல் உம் தகும் புலவோன் கு ஏ

53

ஆயிரம் முகத்து ஆன் அகன்றது ஆயின் உம்
பாயிரம் இல்லது பனுவல் அன்று ஏ

54

மாட கு சித்திரம் உம் மா நகர் கு கோபுரம் உம்
ஆடு அமை தோள் நல்லார் கு அணி உம் போல் - நாடி முன்
ஐது உரையாநின்ற அணிந்துரை ஐ எ நூல் கு உம்
பெய்து உரையா வைத்தார் பெரிது

55

2. எழுத்ததிகாரம் 2.1. எழுத்தியல்

பூ மலி அசோகின் புனை நிழல் அமர்ந்த
நான்முகன் தொழுது நன்கு இயம்புவன் எழுத்து ஏ

56

எண் பெயர் முறை பிறப்பு உருவம் மாத்திரை
முதல் ஈறு இடைநிலை போலி என்றா
பதம் புணர்பு என பன்னிரு பாற்று அது ஏ

57

2.1.1.எண்

மொழி முதல் காரணம் ஆம் அணு திரள் ஒலி
எழுத்து அது முதல் சார்பு என இரு வகைத்து ஏ

58

உயிர் உம் உடம்பு உம் ஆம் முப்பது உம் முதல் ஏ

59

உயிர்மெய் ஆய்தம் உயிரளபு ஒற்றளபு
அஃகிய இ உ ஐ ஔ மஃகான்
தனிநிலை பத்து உம் சார்பெழுத்து ஆகும்

60

உயிர்மெய் இரட்டு நூற்றெட்டு உயர் ஆய்தம்
எட்டு உயிரளபு எழு மூன்று ஒற்றளபெடை
ஆறு ஏழ் அஃகும் இ முப்பான் ஏழ்
உகரம் ஆறு ஆறு ஐகான் மூன்று ஏ
ஔகான் ஒன்று ஏ மஃகான் மூன்று ஏ
ஆய்தம் இரண்டு ஒடு சார்பெழுத்து உறு விரி
ஒன்று ஒழி முந்நூற்று எழுபான் என்ப

61

2.1.2. பெயர்

இடுகுறி காரண பெயர் பொது சிறப்பின

62

அ முதல் ஈர் ஆறு ஆவி க முதல்
மெய் மூ ஆறு என விளம்பினர் புலவர்

63

அவற்று உள்
அ இ உ எ ஒ குறில் ஐந்து ஏ

64

ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ நெடில்

65

அ இ உ முதல் தனி வரின் சுட்டு ஏ

66

எ யா முதல் உம் ஆ ஓ ஈற்று உம்
ஏ இரு வழி உம் வினா ஆகும் ஏ

67

வல்லினம் க ச ட த ப ற என ஆறு ஏ

68

மெல்லினம் ங ஞ ண ந ம ன என ஆறு ஏ

69

இடையினம் ய ர ல வ ழ ள என ஆறு ஏ

70

ஐ ஔ இ உ செறிய முதலெழுத்து
இவ் இரண்டு ஓர் இனம் ஆய் வரல் முறை ஏ

71

தானம் முயற்சி அளவு பொருள் வடிவு
ஆன ஒன்று ஆதி ஓர் புடை ஒப்பு இனம் ஏ

72

2.1.3. முறை

சிறப்பின் உம் இனத்தின் உம் செறிந்து ஈண்டு அ முதல்
நடத்தல் தான் ஏ முறை ஆகும் ஏ

73

2.1.4. பிறப்பு

நிறை உயிர் முயற்சியின் உள் வளி துரப்ப
எழும் அணு திரள் உரம் கண்டம் உச்சி
மூக்கு உற்று இதழ் நா பல் அண தொழிலின்
வெவ்வேறு எழுத்து ஒலி ஆய் வரல் பிறப்பு ஏ

74

அ வழி
ஆவி இடைமை இடம் மிடறு ஆகும்
மேவும் மென்மை மூக்கு உரம் பெறும் வன்மை

75

அவற்று உள்
முயற்சி உள் அ ஆ அங்காப்பு உடைய

76

இ ஈ எ ஏ ஐ அங்காப்பு ஓடு
அண் பல் முதல் நா விளிம்பு உற வரும் ஏ

77

உ ஊ ஒ ஓ ஔ இதழ் குவிவு ஏ

78

க ங உம் ச ஞ உம் ட ண உம் முதல் இடை
நுனி நா அண்ணம் உற முறை வரும் ஏ

79

அண் பல் அடி நா முடி உற த ந வரும்

80

மீ கீழ் இதழ் உற ப ம பிறக்கும்

81

அடி நா அடி அணம் உற ய தோன்றும்

82

அண்ணம் நுனி நா வருட ர ழ வரும்

83

அண் பல் முதல் உம் அண்ணம் உம் முறையின்
நா விளிம்பு வீங்கி ஒற்ற உம் வருட உம்
லகாரம் ளகாரம் ஆய் இரண்டு உம் பிறக்கும்

84

மேல் பல் இதழ் உற மேவிடும் வ ஏ

85

அண்ணம் நுனி நா நனி உறின் ற ன வரும்

86

ஆய்த கு இடம் தலை அங்கா முயற்சி
சார்பெழுத்து ஏன உம் தம் முதல் அனைய

87

எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில்
திரிபு உம் தத்தமின் சிறிது உள ஆகும்

88

புள்ளி விட்டு அ ஒடு முன் உரு ஆகி உம்
ஏனை உயிர் ஓடு உருவு திரிந்து உம்
உயிர் அளவு ஆய் அதன் வடிவு ஒழித்து இரு வயின்
பெயர் ஒடு உம் ஒற்று முன் ஆய் வரும் உயிர்மெய்

89

குறியதன் முன்னர் ஆய்த புள்ளி
உயிர் ஒடு புணர்ந்த வல் ஆறன் மிசைத்து ஏ

90

இசை கெடின் மொழி முதல் இடை கடை நிலை நெடில்
அளபு எழும் அவற்று அவற்று இன குறில் குறி ஏ

91

ங ஞ ண ந ம ன வ ய ல ள ஆய்தம்
அளபு ஆம் குறில் இணை குறில் கீழ் இடை கடை
மிகல் ஏ அவற்றின் குறி ஆம் வேறு ஏ

92

யகரம் வர குறள் உ திரி இகரம் உம்
அசைச்சொல் மியாவின் இகரம் உம் குறிய

93

நெடில் ஓடு ஆய்தம் உயிர் வலி மெலி இடை
தொடர் மொழி இறுதி வன்மை ஊர் உகரம்
அஃகும் பிற மேல் தொடர உம் பெறும் ஏ

94

தன் சுட்டு அளபு ஒழி ஐ மூ வழி உம்
நையும் ஔ உம் முதல் அற்று ஆகும்

95

ண ன முன் உம் வஃகான் மிசை உம் ம குறுகும்

96

ல ள ஈற்று இயைபின் ஆம் ஆய்தம் அஃகும்

97

2.1.5. உருவம்

தொல்லை வடிவின எல்லா எழுத்து உம் ஆண்டு
எய்தும் எகர ஒகர மெய் புள்ளி

98

2.1.6. மாத்திரை

மூன்று உயிரளபு இரண்டு ஆம் நெடில் ஒன்று ஏ
குறில் ஓடு ஐ ஔ குறுக்கம் ஒற்றளபு
அரை ஒற்று இ உ குறுக்கம் ஆய்தம்
கால் குறள் மஃகான் ஆய்தம் மாத்திரை

99

இயல்பு எழும் மாந்தர் இமை நொடி மாத்திரை

100

ஆவி உம் ஒற்று உம் அளவு இறந்து இசைத்தல் உம்
மேவும் இசை விளி பண்டமாற்று ஆதியின்

101

2.1.7. முதநிலை

பன்னீர் உயிர் உம் க ச த ந ப ம வ ய
ஞ ங ஈர் ஐந்து உயிர்மெய் உம் மொழி முதல்

102

உ ஊ ஒ ஓ அல ஒடு வ முதல்

103


அ ஆ உ ஊ ஓ ஔ ய முதல்

104

அ ஆ எ ஒ ஓடு ஆகும் ஞ முதல்

105

சுட்டு யா எகர வினா வழி அ ஐ
ஒட்டி ங உம் முதல் ஆகும் ஏ

106

2.1.8. இறுதிநிலை

ஆவி ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள மெய்
சாயும் உகரம் நால் ஆறு உம் ஈறு ஏ

107

குற்று உயிர் அளபின் ஈறு ஆம் எகரம்
மெய் ஒடு ஏலாது ஒ ந ஒடு ஆம் ஔ
ககர வகரம் ஓடு ஆகும் என்ப

108

நின்ற நெறி ஏ உயிர்மெய் முதல் ஈறு ஏ

109

2.1.9. இடைநிலை மயக்கம்

க ச த ப ஒழித்த ஈர் ஏழன் கூட்டம்
மெய்ம்மயக்கு உடனிலை ர ழ ஒழித்து ஈர் எட்டு
ஆகும் இவ் இரு பால் மயக்கு உம் மொழி இடை
மேவும் உயிர் மெய் மயக்கு அளவு இன்று ஏ

110

ங முன் க ஆம் வ முன் ய ஏ

111

ஞ ந முன் தம் இனம் யகரம் ஒடு ஆகும்

112

ட ற முன் க ச ப மெய் உடன் மயங்கும்

113

ண ன முன் இனம் க ச ஞ ப ம ய வ வரும்

114

ம முன் ப ய வ மயங்கும் என்ப

115

ய ர ழ முன்னர் மொழி முதல் மெய் வரும்

116

ல ள முன் க ச ப வ ய ஒன்றும் ஏ

117

ர ழ அல்லன தம் முன் தாம் உடன் நிலையும்

118

ய ர ழ ஒற்றின் முன் க ச த ப ங ஞ ந ம
ஈர் ஒற்று ஆம் ர ழ தனி குறில் அணையா

119

ல ள மெய் திரிந்த ன ண முன் மகாரம்
நைந்து ஈர் ஒற்று ஆம் செய்யுள் உள் ஏ

120

தம் பெயர் மொழியின் முதல் உம் மயக்கம் உம்
இ முறை மாறி உம் இயலும் என்ப

121

2.1.10.போலி

மகர இறுதி அஃறிணை பெயரின்
னகரம் ஓடு உறழா நடப்பன உள ஏ

122

அ ஐ முதல் இடை ஒக்கும் ச ஞ ய முன்

123

ஐகான் ய வழி ந ஒடு சில் வழி
ஞஃகான் உறழும் என்மர் உம் உளர் ஏ

124

அ முன் இகரம் யகரம் என்ற இவை
எய்தின் ஐ ஒத்து இசைக்கும் அ ஓடு
உ உம் வ உம் ஔ ஓர் அன்ன

125

மெய்கள் அகரம் உம் நெட்டு உயிர் காரம் உம்
ஐ ஔ கான் உம் இருமை குறில் இவ்
இரண்டு ஒடு கரம் உம் ஆம் சாரியை பெறும் பிற

126

மொழி ஆய் தொடரின் உம் முன் அனைத்து எழுத்து ஏ

127

2.2. பதவியல்

2.2.1.பதம்

எழுத்து ஏ தனித்து உம் தொடர்ந்து உம் பொருள் தரின்
பதம் ஆம் அது பகாப்பதம் பகுபதம் என
இரு பால் ஆகி இயலும் என்ப

128

உயிர் ம இல் ஆறு உம் த ப ந இல் ஐந்து உம்
க வ ச இல் நால் உம் ய இல் ஒன்று உம்
ஆகும் நெடில் நொ து ஆம் குறில் இரண்டு ஓடு
ஓர் எழுத்து இயல் பதம் ஆறு ஏழ் சிறப்பின

129

பகாப்பதம் ஏழு உம் பகுபதம் ஒன்பது உம்
எழுத்து ஈறு ஆக தொடரும் என்ப

130

பகுப்பு ஆல் பயன் அற்று இடுகுறி ஆகி
முன்னே ஒன்று ஆய் முடிந்து இயல்கின்ற
பெயர் வினை இடை உரி நான்கு உம் பகாப்பதம்

131

பொருள் இடம் காலம் சினை குணம் தொழிலின்
வரு பெயர் பொழுது கொள் வினை பகுபதம் ஏ

132

பகுதி விகுதி இடைநிலை சாரியை
சந்தி விகாரம் ஆறின் உம் ஏற்பவை
முன்னி புணர்ப்ப முடியும் எ பதங்கள் உம்

133

2.2.2. பகுதி

தத்தம்
பகாப்பதங்கள் ஏ பகுதி ஆகும்

134

செம்மை சிறுமை சேய்மை தீமை
வெம்மை புதுமை மென்மை மேன்மை
திண்மை உண்மை நுண்மை இவற்று எதிர்
இன்ன உம் பண்பு இன் பகா நிலை பதம் ஏ

135

ஈறு போதல் இடை உகரம் இ ஆதல்
ஆதி நீடல் அடி அகரம் ஐ ஆதல்
தன் ஒற்று இரட்டல் முன் நின்ற மெய் திரிதல்
இனம் மிகல் இனைய உம் பண்பின் கு இயல்பு ஏ

136

நட வா மடி சீ விடு கூ வே வை
நொ போ வௌ உரிஞ் உண் பொருந் திரும் தின்
தேய் பார் செல் வவ் வாழ் கேள் அஃகு என்று
எய்திய இருபான் மூன்று ஆம் ஈற்ற உம்
செய் என் ஏவல் வினை பகாப்பதம் ஏ

137

செய் என் வினை வழி வி பி தனி வரின்
செய்வி என் ஏவல் இணையின் ஈர் ஏவல்

138

விளம்பிய பகுதி வேறு ஆதல் உம் விதி ஏ

139

2.2.3. விகுதி

அன் ஆன் அள் ஆள் அர் ஆர் ப மார்
அ ஆ கு டு து று என் ஏன் அல் அன்
அம் ஆம் எம் ஏம் ஓம் ஒடு உம் ஊர்
க ட த ற ஐ ஆய் இ மின் இர் ஈர்
ஈயர் க ய உம் என்ப உம் பிற உம்
வினையின் விகுதி பெயரின் உம் சில ஏ

140

2.2.4. இடைநிலை

இலக்கியம் கண்டு அதன் கு இலக்கணம் இயம்பலின்
பகுதி விகுதி பகுத்து இடை நின்றது ஐ
வினைப்பெயர் அல் பெயர் கு இடைநிலை எனல் ஏ

141

த ட ற ஒற்று இன் ஏ ஐம் பால் மூ இடத்து
இறந்தகாலம் தரும் தொழில் இடைநிலை

142

ஆநின்று கின்று கிறு மூ இடத்தின்
ஐம் பால் நிகழ்பொழுது அறை வினை இடைநிலை

143

ப வ மூ இடத்து ஐம் பால் எதிர்பொழுது
இசை வினை இடைநிலை ஆம் இவை சில இல

144

ற ஒடு உகர உம்மை நிகழ்பு அல்ல உம்
த ஒடு இறப்பு உம் எதிர்வு உம் ட ஒடு
கழிவு உம் க ஓடு எதிர்வு உம் மின் ஏவல்
வியங்கோள் இ மார் எதிர்வு உம் பாந்தம்
செலவு ஒடு வரவு உம் செய்யும் நிகழ்பு எதிர்வு உம்
எதிர்மறை மும்மை உம் ஏற்கும் ஈங்கு ஏ

145

2.2.5. வடமொழி ஆக்கம்

இடை இல் நான்கு உம் ஈற்று இல் இரண்டு உம்
அல்லா அச்சு ஐ வருக்கம் முதல் ஈறு
ய ஆதி நான்மை ள ஆகும் ஐ ஐம்
பொது எழுத்து ஒழிந்த நால் ஏழு உம் திரியும்

146

அவற்று உள்
ஏழ் ஆம் உயிர் இ உம் இரு உம் ஐ வருக்கத்து
இடையின் மூன்று உம் அ அ முதல் உம்
எட்டு ஏ ய உம் முப்பது ச ய உம்
மேல் ஒன்று ச ட உம் இரண்டு ச த உம்
மூன்று ஏ அ க உம் ஐந்து இரு க உம்
ஆ ஈறு ஐ உம் ஈ ஈறு இகரம் உம்

147

ரவ்வின் கு அ முதல் ஆம் மு குறில் உம்
லவ்வின் கு இ முதல் இரண்டு உம் யவ்வின் கு
இ உம் மொழி முதல் ஆகி முன் வரும் ஏ

148

இணைந்து இயல் காலை ய ர ல கு இகரம் உம்
ம வ கு உகரம் உம் நகர கு அகரம் உம்
மிசை வரும் ர வழி உ உம் ஆம் பிற

149

ற ன ழ எ ஒ உம் உயிர்மெய் உம் உயிரளபு
அல்லா சார்பு உம் தமிழ் பிற பொது ஏ

150

2.3. உயிரிற்றுப் புணரியல்

2.3.1. புணர்ச்சி

மெய் உயிர் முதல் ஈறு ஆம் இரு பதங்கள் உம்
தன் ஒடு உம் பிறிது ஒடு உம் அல்வழி வேற்றுமை
பொருளின் பொருந்துழி நிலை வரு மொழிகள்
இயல்பு ஒடு விகாரத்து இயைவது புணர்ப்பு ஏ

151

வேற்றுமை ஐ முதல் ஆறு ஆம் அல்வழி
தொழில் பண்பு உவமை உம்மை அன்மொழி
எழுவாய் விளி ஈர் எச்சம் முற்று இடை உரி
தழுவுதொடர் அடுக்கு என ஈர் ஏழ் ஏ

152

விகாரம் அனைத்து உம் மேவலது இயல்பு ஏ

153

தோன்றல் திரிதல் கெடுதல் விகாரம்
மூன்று உம் மொழி மூ இடத்து உம் ஆகும்

154

வலித்தல் மெலித்தல் நீட்டல் குறுக்கல்
விரித்தல் தொகுத்தல் உம் வரும் செய்யுள் வேண்டுழி

155

ஒரு மொழி மூ வழி குறைதல் உம் அனைத்து ஏ

156

ஒரு புணர் கு இரண்டு மூன்று உம் உற பெறும்

157

2.3.2. பொதுப் புணர்ச்சி

எண் மூ எழுத்து ஈற்று எ வகை மொழி கு உம்
முன் வரும் ஞ ந ம ய வக்கள் இயல்பு உம்
குறில் வழி ய தனி ஐ நொ து முன் மெலி
மிகல் உம் ஆம் ண ள ன ல வழி ந திரியும்

158

பொது பெயர் உயர்திணை பெயர்கள் ஈற்று மெய்
வலி வரின் இயல்பு ஆம் ஆவி ய ர முன்
வன்மை மிகா சில விகாரம் ஆம் உயர்திணை

159

ஈற்று யா வினா விளி பெயர் முன் வலி இயல்பு ஏ

160

ஆவி ய ர ழ இறுதி முன்னிலை வினை
ஏவல் முன் வல்லினம் இயல்பு ஒடு விகற்பு ஏ

161

2.3.3. உயிரீற்றுச் சிறப்புப் புணர்ச்சி

இ ஈ ஐ வழி ய உம் ஏனை
உயிர் வழி வ உம் ஏ முன் இவ் இருமை உம்
உயிர் வரின் உடம்படுமெய் என்று ஆகும்

162

எகர வினா மு சுட்டின் முன்னர்
உயிர் உம் யகரம் உம் எய்தின் வ உம்
பிற வரின் அவை உம் தூக்கு இல் சுட்டு
நீளின் யகரம் உம் தோன்றுதல் நெறி ஏ

163

உயிர் வரின் உ குறள் மெய் விட்டு ஓடும்
ய வரின் இ ஆம் முற்று உம் அற்று ஒரோ வழி

164

2.3.4. உயிரீற்றுமுன் வல்லினம்

இயல்பின் உம் விதியின் உம் நின்ற உயிர் முன்
க ச த ப மிகும் விதவாதன மன் ஏ

165

மர பெயர் முன்னர் இன மெல்லெழுத்து
வர பெறுன உம் உள வேற்றுமை வழி ஏ

166

செய்யிய என்னும் வினையெச்சம் பல் வகை
பெயரின் எச்சம் முற்று ஆறன் உருபு ஏ
அஃறிணை பன்மை அம்ம முன் இயல்பு ஏ

167

வாழிய என்பதன் ஈற்றின் உயிர்மெய்
ஏகல் உம் உரித்து அஃது ஏகின் உம் இயல்பு ஏ

168

சாவ என் மொழி ஈற்று உயிர்மெய் சாதல் உம் விதி

169

பல சில எனும் இவை தம் முன் தாம் வரின்
இயல்பு உம் மிகல் உம் அகரம் ஏக
லகரம் றகரம் ஆகல் உம் பிற வரின்
அகரம் விகற்பம் ஆகல் உம் உள பிற

170

அல்வழி ஆ மா மியா முற்று முன் மிகா

171

குறியதன் கீழ் ஆ குறுகல் உம் அதன் ஓடு
உகரம் ஏற்றல் உம் இயல்பு உம் ஆம் தூக்கின்

172

அன்றி இன்றி என் வினையெஞ்சு இகரம்
தொடர்பின் உள் உகரம் ஆய் வரின் இயல்பு ஏ

173

உரி வரின் நாழியின் ஈற்று உயிர்மெய் கெட
மருவும் டகரம் உரியின் வழி ஏ
யகர உயிர்மெய் ஆம் ஏற்பன வரின் ஏ

174

சுவை புளி முன் இன மென்மை உம் ோன்றும்

175

அல்வழி இ ஐ முன்னர் ஆயின்
இயல்பு உம் மிகல் உம் விகற்பம் உம் ஆகும்

176

ஆ முன் பகர ஈ அனைத்து உம் வர குறுகும்
மேலன அல்வழி இயல்பு ஆகும் ஏ

177

ப ஈ நீ மீ முன்னர் அல்வழி
இயல்பு ஆம் வலி மெலி மிகல் உம் ஆம் மீ கு ஏ

178

மூன்று ஆறு உருபு எண் வினைத்தொகை சுட்டு ஈறு
ஆகும் உகரம் முன்னர் இயல்பு ஆம்

179

அது முன் வரும் அன்று ஆன்று ஆம் தூக்கின்

180

வன் தொடர் அல்லன முன் மிகா அல்வழி

181

இடை தொடர் ஆய்த தொடர் ஒற்று இடையின்
மிகா நெடில் உயிர் தொடர் முன் மிகா வேற்றுமை

182

நெடில் ஓடு உயிர் தொடர் குற்றுகரங்கள் உள்
ட ற ஒற்று இரட்டும் வேற்றுமை மிக ஏ

183

மென் தொடர் மொழி உள் சில வேற்றுமை இல்
தம் இன வன் தொடர் ஆகா மன் ஏ

184

ஐ ஈற்று உடை குற்றுகரம் உம் உள ஏ

185

திசை ஒடு திசை உம் பிற உம் சேரின்
நிலை ஈற்று உயிர்மெய் க ஒற்று நீங்கல் உம்
றகரம் ன ல ஆ திரிதல் உம் ஆம் பிற

186

தெங்கு நீண்டு ஈற்று உயிர்மெய் கெடும் காய் வரின்

187

எண் நிறை அளவு உம் பிற உம் எய்தின்
ஒன்று முதல் எட்டு ஈறு ஆம் எண் உள்
முதல் ஈர் எண் முதல் நீளும் மூன்று ஆறு
ஏழ் குறுகும் ஆறு ஏழு அல்லவற்றின்
ஈற்று உயிர்மெய் உம் ஏழன் உயிர் உம்
ஏகும் ஏற்புழி என்மனார் புலவர்

188

ஒன்றன் புள்ளி ரகரம் ஆக
இரண்டன் ஒற்று உயிர் ஏக உ வரும் ஏ

189

மூன்றன் உறுப்பு அழிவு உம் வந்தது உம் ஆகும்

190

நான்கன் மெய் ஏ ல ற ஆகும் ஏ

191

ஐந்தன் ஒற்று அடைவது உம் இனம் உம் கேடு உம்

192

எட்டன் உடம்பு ண ஆகும் என்ப

193

ஒன்பான் ஒடு பத்து உம் நூறு உம் ஒன்றின்
முன்னது இன் ஏனைய முரணி ஒ ஒடு
தகரம் நிறீஇ பஃது அகற்றி ன ஐ
நிரல் ஏ ண ள ஆ திரிப்பது நெறி ஏ

194

முதல் இரு நான்கு ஆம் எண் முனர் பத்தின்
இடை ஒற்று ஏகல் ஆய்தம் ஆகல்
என இரு விதி உம் ஏற்கும் என்ப

195

ஒருபஃது ஆதி முன் ஒன்று முதல் ஒன்பான்
எண் உம் அவை ஊர் பிற உம் எய்தின்
ஆய்தம் அழிய ஆண்டு ஆகும் த ஏ

196

ஒன்று முதல் ஈர் ஐந்து ஆயிரம் கோடி
எண் நிறை அளவு உம் பிற வரின் பத்தின்
ஈற்று உயிர்மெய் கெடுத்து இன் உம் இற்று உம்
ஏற்பது ஏற்கும் ஒன்பது உம் இனைத்து ஏ

197

இரண்டு முன் வரின் பத்தின் ஈற்று உயிர்மெய்
கரந்திட ஒற்று ன ஆகும் என்ப

198

ஒன்பது ஒழித்த எண் ஒன்பது உம் இரட்டின்
முன்னதின் முன் அல ஓட உயிர் வரின்
வ உம் மெய் வரின் வந்தது உம் மிகல் நெறி

199

பூ பெயர் முன் இன மென்மை உம் தோன்றும்

200

இடைச்சொல் ஏ ஓ முன் வரின் இயல்பு ஏ

201

வேற்றுமை ஆயின் ஐகான் இறு மொழி
ஈற்று அழிவு ஓடு உம் அம் ஏற்ப உம் உள ஏ

202

பனை முன் கொடி வரின் மிகல் உம் வலி வரின்
ஐ போய் அம் உம் திரள் வரின் உறழ்வு உம்
அட்டு உறின் ஐ கெட்டு அ நீள்வு உம் ஆம் வேற்றுமை

203

2.4.மெய்யீற்று புணரியல்

உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பு ஏ

204

தனி குறில் முன் ஒற்று உயிர் வரின் இரட்டும்

205

தன் ஒழி மெய் முன் ய வரின் இகரம்
துன்னும் என்று துணிநர் உம் உளர் ஏ

206

ஞ ண ந ம ல வ ள ன ஒற்று இறு தொழிற்பெயர்
ஏவல் வினை நனி ய அல் மெய் வரின்
உ உறும் ஏவல் உறா சில சில் வழி

207

ந இறு தொழிற்பெயர் கு அ உம் ஆம் வேற்றுமை

208

ண ன வல்லினம் வர ட ற உம் பிற வரின்
இயல்பு உம் ஆகும் வேற்றுமை கு அல்வழி கு
அனைத்து மெய் வரின் உம் இயல்பு ஆகும் ஏ

209

குறில் அணைவு இல்லா ண னக்கள் வந்த
நகரம் திரிந்துழி நண்ணும் கேடு ஏ

210

சாதி குழூஉ பரண் கவண் பெயர் இறுதி
இயல்பு ஆம் வேற்றுமை கு உணவு எண் சாண் பிற
ட ஆகல் உம் ஆம் அல்வழி உம் ஏ

211

னஃகான் கிளைப்பெயர் இயல்பு உம் அஃகான்
அடைவு உம் ஆகும் வேற்றுமை பொருள் கு ஏ

212

மீன் ற ஒடு பொரூஉம் வேற்றுமை வழி ஏ

213

தேன் மொழி மெய் வரின் இயல்பு உம் மென்மை
மேவின் இறுதி அழிவு உம் வலி வரின்
ஈறு போய் வலி மெலி மிகல் உம் ஆம் இரு வழி

214

மரம் அல் எகின் மொழி இயல்பு உம் அகரம்
மருவ வலி மெலி மிகல் உம் ஆகும்

215

குயின் ஊன் வேற்றுமை கண் உம் இயல்பு ஏ

216

மின் பின் பன் கன் தொழிற்பெயர் அனைய
கன் அ ஏற்று மென்மை ஓடு உறழும்

217

தன் என் என்பவற்று ஈற்று ன வன்மை ஓடு
உறழும் நின் ஈறு இயல்பு ஆம் உற ஏ

218

ம ஈறு ஒற்று அழிந்து உயிர் ஈறு ஒப்ப உம்
வன்மை கு இனம் ஆ திரிப உம் ஆகும்

219

வேற்றுமை ம போய் வலி மெலி உறழ்வு உம்
அல்வழி உயிர் இடை வரின் இயல்பு உம் உள

220

நும் தம்
எம் நம் ஈறு ஆம் ம வரு ஞ ந ஏ

221

அகம் முனர் செவி கை வரின் இடையன கெடும்

222

ஈம் உம்
கம் உம் உரும் உம் தொழிற்பெயர் மானும்
முதலன வேற்றுமை கு அ உம் பெறும் ஏ

223

ய ர ழ முன்னர் க ச த ப அல்வழி
இயல்பு உம் மிகல் உம் ஆகும் ேற்றுமை
மிகல் உம் இனத்து ஓடு உறழ்தல் உம் விதி மேல்

224

தமிழ் அ உற உம் பெறும் வேற்றுமை கு ஏ
தாழ் உம் கோல் வந்து உறுமேல் அற்று ஏ

225

கீழின் முன் வன்மை விகற்பம் உம் ஆகும்

226

ல ள வேற்றுமை இல் ற ட உம் அல்வழி
அவற்று ஓடு உறழ்வு உம் வலி வரின் ஆம் மெலி
மேவின் ன ண உம் இடை வரின் இயல்பு உம்
ஆகும் இரு வழி ஆன் உம் என்ப

227

குறில் வழி ல ள த அணையின் ஆய்தம்
ஆக உம் பெறூஉம் அல்வழி ஆன் ஏ

228

குறில் செறியா ல ள அல்வழி வந்த
தகரம் திரிந்த பின் கேடு உம் ஈர் இடத்து உம்
வரு ந திரிந்த பின் மாய்வு உம் வலி வரின்
இயல்பு உம் திரிபு உம் ஆவன உள பிற

229

ல ள இறு தொழிற்பெயர் ஈர் இடத்து உம் உ உறா
வலி வரின் அல்வழி இயல்பு உம் ஆவன உள

230

வல் ஏ தொழிற்பெயர் அற்று இரு வழி உம்
பலகை நாய் வரின் உம் வேற்றுமை கு அ உம் ஆம்

231

நெல் உம் செல் உம் கொல் உம் சொல் உம்
அல்வழி ஆன் உம் றகரம் ஆகும்

232

இல் என் இன்மை சொல் கு ஐ அடைய
வன்மை விகற்பம் உம் ஆகாரத்து ஒடு
வன்மை ஆகல் உம் இயல்பு உம் ஆகும்

233

புள் உம் வள் உம் தொழிற்பெயர் உம் மானும்

234

சுட்டு வகரம் மூ இனம் உற முறை ஏ
ஆய்தம் உம் மென்மை உம் இயல்பு உம் ஆகும்

235

தெவ் என் மொழி ஏ தொழிற்பெயர் அற்று ஏ
ம வரின் வஃகான் ம உம் ஆகும்

236

ன ல முன் ற ன உம் ண ள முன் ட ண உம்
ஆகும் த நக்கள் ஆயும்கால் ஏ

237

உருபின் முடிபவை ஒக்கும் அ பொருளின் உம்

238

இடை உரி வடசொலின் இயம்பிய கொளாத உம்
போலி உம் மரூஉ உம் பொருந்திய ஆற்றின் கு
இயைய புணர்த்தல் யாவர் கு உம் நெறி ஏ

239

2.5. உருபு புணரியல்

ஒருவன் ஒருத்தி பலர் ஒன்று பல என
வரு பெயர் ஐந்து ஒடு பெயர் முதல் இரு நான்கு
உருபு உம் உறழ்தர நாற்பது ஆம் உருபு ஏ

240

பெயர் வழி தம் பொருள் தர வரும் உருபு ஏ

242

ஒற்று உயிர் முதல் ஈற்று உருபுகள் புணர்ச்சியின்
ஒக்கும் மன் அ பெயர் வேற்றுமை புணர்ப்பு ஏ

242

பதம் முன் விகுதி உம் பதம் உம் உருபு உம்
புணர் வழி ஒன்று உம் பல உம் சாரியை
வருதல் உம் தவிர்தல் உம் விகற்பம் உம் ஆகும்

243

அன் ஆன் இன் அல் அற்று இற்று அத்து அம்
தம் நம் நும் ஏ அ உ ஐ கு ன
இன்ன பிற உம் பொது சாரியை ஏ

244

எல்லாம் என்பது இழிதிணை ஆயின்
அற்று ஓடு உருபின் மேல் உம் உறும் ஏ
அன்றேல் நம் இடை அடைந்து அற்று ஆகும்

245

எல்லார் உம் எல்லீர் உம் என்பவற்று உம்மை
தள்ளி நிரல் ஏ தம் நும் சார
புல்லும் உருபின் பின்னர் உம் ஏ

246

தான் தாம் நாம் முதல் குறுகும் யான் யாம்
நீ நீர் என் எம் நின் நும் ஆம் பிற
குவ்வின் அ வரும் நான்கு ஆறு இரட்டல

247

ஆ மா கோ ன அணைய உம் பெறும் ஏ

248

ஒன்று முதல் எட்டு ஈறு ஆம் எண் ஊர்
பத்தின் முன் ஆன் வரின் ப ஒற்று ஒழிய மேல்
எல்லாம் ஓடும் ஒன்பது உம் இற்று ஏ

249

வ இறு சுட்டின் கு அற்று உறல் வழி ஏ

250

சுட்டின் முன் ஆய்தம் அன் வரின் கெடும் ஏ

251

அத்தின் அகரம் அகர முனை இல்லை

252

இதன் கு இது சாரியை எனின் அளவு இன்மையின்
விகுதி உம் பதம் உம் உருபு உம் பகுத்து இடை
நின்ற எழுத்து உம் பதம் உம் இயற்கை உம்
ஒன்ற உணர்த்தல் உரவோர் நெறி ஏ

253

விகுதி பதம் சாரியை உருபு அனைத்தின் உம்
உரைத்த விதியின் ஓர்ந்து ஒப்பன கொளல் ஏ

254

இயல்பின் விகாரம் உம் விகாரத்து இயல்பு உம்
உயர்திணை இடத்து விரிந்து உம் தொக்கு உம்
விரவுப்பெயரின் விரிந்து உம் நின்று உம்
அன்ன பிற உம் ஆகும் ஐ உருபு ஏ

255

புள்ளி உம் உயிர் உம் ஆய் இறு சொல் முன்
தம்மின் ஆகிய தொழில் மொழி வரின் ஏ
வல்லினம் விகற்பம் உம் இயல்பு உம் ஆகும்

256

இதன் கு இது முடிபு என்று எஞ்சாது யா உம்
விதிப்ப அளவு இன்மையின் விதித்தவற்று இயல் ஆன்
வகுத்து உரையாத உம் வகுத்தனர் கொளல் ஏ

257

3. சொல்லதிகாரம் 3.1. பெயரியல்

மு சகம் நிழற்றும் முழு மதி மு குடை
அச்சுதன் அடி தொழுது அறைகுவன் சொல் ஏ

258

ஒருமொழி தொடர்மொழி பொதுமொழி என்றா
இரு திணை ஐம் பால் பொருள் ஐ உம் தன் ஐ உம்
மூ வகை இடத்து உம் வழக்கு ஒடு செய்யுளின்
வௌிப்படை குறிப்பின் விரிப்பது சொல் ஏ

259

ஒருமொழி ஒரு பொருளன ஆம் தொடர்மொழி
பல பொருளன பொது இருமை உம் ஏற்பன

260

மக்கள் தேவர் நரகர் உயர்திணை
மற்று உயிர் உள்ள உம் இல்ல உம் அஃறிணை

261

ஆண் பெண் பலர் என மு பாற்று உயர்திணை

262

ஒன்று ஏ பல என்று இரு பாற்று அஃறிணை

263

பெண்மை விட்டு ஆண் அவாவுவ பேடு ஆண்பால்
ஆண்மை விட்டு அல்லது அவாவுவ பெண்பால்
இருமை உம் அஃறிணை அன்ன உம் ஆகும்

264

படர்க்கை வினைமுற்று நாமம் குறிப்பின்
பெறப்படும் திணை பால் அனைத்து உம் ஏனை
இடத்து அவற்று ஒருமை பன்மை பால் ஏ

265

தன்மை முன்னிலை படர்க்கை மூ இடன் ஏ

266

இலக்கணம் உடையது இலக்கணப்போலி
மரூஉ என்று ஆகும் மூ வகை இயல்பு உம்
இடக்கரடக்கல் மங்கலம் குழூஉக்குறி
எனும் மு தகுதி ஓடு ஆறு ஆம் வழக்கு இயல்

267

பல் வகை தாதுவின் உயிர் கு உடல் போல் பல
சொல் ஆல் பொருள் கு இடன் ஆக உணர்வின் இன்
வல்லோர் அணி பெற செய்வன செய்யுள்

268

ஒன்று ஒழி பொது சொல் விகாரம் தகுதி
ஆகுபெயர் அன்மொழி வினைக்குறிப்பு ஏ
முதல் தொகை குறிப்பு ஓடு இன்ன பிற உம்
குறிப்பின் தரு மொழி அல்லன வௌிப்படை

269

3.1.1. சொற்பாகுபாடு

அது ஏ
இயற்சொல் திரிசொல் இயல்பின் பெயர் வினை
என இரண்டு ஆகும் இடை உரி அடுத்து
நான்கு உம் ஆம் திசை வடசொல் அணுகா வழி

270

செந்தமிழ் ஆகி திரியாது யார் கு உம்
தம் பொருள் விளக்கும் தன்மைய இயற்சொல்

271

ஒரு பொருள் குறித்த பல சொல் ஆகி உம்
பல பொருள் குறித்த ஒரு சொல் ஆகி உம்
அரிது உணர் பொருளன திரிசொல் ஆகும்

272

செந்தமிழ் நிலம் சேர் பன்னிரு நிலத்தின் உம்
ஒன்பதிற்று இரண்டின் இல் தமிழ் ஒழி நிலத்தின் உம்
தம் குறிப்பின ஏ திசைச்சொல் என்ப

273

பொது எழுத்து ஆன் உம் சிறப்பு எழுத்து ஆன் உம்
ஈர் எழுத்து ஆன் உம் இயைவன வடசொல்

274

3.1.2. பெயர்ச்சொல்

இடுகுறி காரணம் மரபு ஓடு ஆக்கம்
தொடர்ந்து தொழில் அல காலம் தோற்றா
வேற்றுமை கு இடன் ஆய் திணை பால் இடத்து ஒன்று
ஏற்ப உம் பொது உம் ஆவன பெயர் ஏ

275

அவற்று உள்
கிளை எண் குழூஉ முதல் பல் பொருள் திணை தேம்
ஊர் வான் அகம் புறம் முதல நிலன் யாண்டு
இருது மதி நாள் ஆதி காலம்
தோள் குழல் மார்பு கண் காது முதல் உறுப்பு (5)
அளவு அறிவு ஒப்பு வடிவு நிறம் கதி
சாதி குடி சிறப்பு ஆதி பல் குணம்
ஓதல் ஈதல் ஆதி பல் வினை
இவை அடை சுட்டு வினா பிற மற்று ஓடு
உற்ற ன ஈறு நம்பி ஆடூஉ (10)
விடலை கோ வேள் குரிசில் தோன்றல்
இன்னன ஆண் பெயர் ஆகும் என்ப

276

கிளை முதல் ஆக கிளந்த பொருள்கள் உள்
ள ஒற்று இகர கு ஏற்ற ஈற்ற உம்
தோழி செவிலி மகடூஉ நங்கை
தையல் ஓடு இன்னன பெண்பால் பெயர் ஏ

277

கிளந்த கிளை முதல் உற்ற ர ஈற்ற உம்
கள் என் ஈற்றின் ஏற்ப உம் பிற உம்
பல்லோர் பெயரின் பகுதி ஆகும்

278

வினா சுட்டு உடன் உம் வேறு உம் ஆம் பொருள்
ஆதி உறு து சுட்டு அணை ஆய்தம்
ஒன்று என் எண் இன்னன ஒன்றன் பெயர் ஏ

279

முன்னர் அவ் ஒடு வரு வை அ உம்
சுட்டு இறு வ உம் கள் இறு மொழி உம்
ஒன்று அல் எண் உம் உள்ள இல்ல
பல்ல சில்ல உள இல பல சில
இன்ன உம் பலவின் பெயர் ஆகும் ஏ

280

பால் பகா அஃறிணை பெயர்கள் பால் பொதுமைய

281

முதற்பெயர் நான்கு உம் சினைப்பெயர் நான்கு உம்
சினைமுதற்பெயர் ஒரு நான்கு உம் முறை இரண்டு உம்
தன்மை நான்கு உம் முன்னிலை ஐந்து உம்
எல்லாம் தாம் தான் இன்னன பொது பெயர்

282

ஆண்மை பெண்மை ஒருமை பன்மையின்
ஆம் அ நான்மைகள் ஆண் பெண் முறைப்பெயர்

283

அவற்று உள்
ஒன்று ஏ இரு திணை தன் பால் ஏற்கும்

284

தன்மை யான் நான் யாம் நாம் முன்னிலை
எல்லீர் நீயிர் நீவிர் நீர் நீ
அல்லன படர்க்கை எல்லாம் எனல் பொது

285

வினையின் பெயர் ஏ படர்க்கை வினையாலணையும்பெயர்
ஏ யாண்டு உம் ஆகும்

286

தான் யான் நான் நீ ஒருமை பன்மை தாம்
யாம் நாம் எலாம் எலீர் நீயிர் நீர் நீவிர்

287

ஒருவன் ஒருத்தி பெயர் மேல் எண் இல

288

ஒருவர் என்பது உயர் இரு பாற்று ஆய்
பன்மை வினை கொளும் பாங்கிற்று என்ப

289

பொருள் முதல் ஆறு ஓடு அளவை சொல் தானி
கருவி காரியம் கருத்தன் ஆதி உள்
ஒன்றன் பெயர் ஆன் அதன் கு இயை பிறிது ஐ
தொல் முறை உரைப்பன ஆகுபெயர் ஏ

290

ஏற்கும் எ வகை பெயர் கு உம் ஈறு ஆய் பொருள்
வேற்றுமை செய்வன எட்டு ஏ வேற்றுமை

291

பெயர் ஏ ஐ ஆல் கு இன் அது கண்
விளி என்று ஆகும் அவற்றின் பெயர் முறை

292

ஆறன் உருபு உம் ஏற்கும் அ உருபு ஏ

293

நீயிர் நீவிர் நான் எழுவாய் அல பெறா

294

அவற்று உள்
எழுவாய் உருபு திரிபு இல் பெயர் ஏ
வினை பெயர் வினா கொளல் அதன் பயனிலை ஏ

295

இரண்டாவதன் உருபு ஐ ஏ அதன் பொருள்
ஆக்கல் அழித்தல் அடைதல் நீத்தல்
ஒத்தல் உடைமை ஆதி ஆகும்

296

மூன்றாவதன் உருபு ஆல் ஆன் ஓடு ஒடு
கருவி கருத்தா உடனிகழ்வு அதன் பொருள்

297

நான்காவதன் கு உருபு ஆகும் கு ஏ
கொடை பகை நேர்ச்சி தகவு அதுவாதல்
பொருட்டு முறை ஆதியின் இதன் கு இது எனல் பொருள் ஏ

298

ஐந்தாவதன் உருபு இல் உம் இன் உம்
நீங்கல் ஒப்பு எல்லை ஏது பொருள் ஏ

299

ஆறன் ஒருமை கு அது உம் ஆது உம்
பன்மை கு அ உம் உருபு ஆம் பண்பு உறுப்பு
ஒன்றன் கூட்டம் பலவின் ஈட்டம்
திரிபின் ஆக்கம் ஆம் தற்கிழமை உம்
பிறிதின்கிழமை உம் பேணுதல் பொருள் ஏ

300

ஏழன் உருபு கண் ஆதி ஆகும்
பொருள் முதல் ஆறு உம் ஓர் இரு கிழமையின்
இடன் ஆய் நிற்றல் இதன் பொருள் என்ப

301

கண் கால் கடை இடை தலை வாய் திசை வயின்
முன் சார் வலம் இடம் மேல் கீழ் புடை முதல்
பின் பாடு அளை தேம் உழை வழி உழி உளி
உள் அகம் புறம் இல் இட பொருள் உருபு ஏ

302

எட்டன் உருபு ஏ எய்து பெயர் ஈற்றின்
திரிபு குன்றல் மிகுதல் இயல்பு அயல்
திரிபு உம் ஆம் பொருள் படர்க்கையோர் ஐ
தன் முகம் ஆக தான் அழைப்பது ஏ

303

இ உ ஊ ஓடு ஐ ஓ ன ள ர ல
ய ஈற்று உயர்திணை ஓ ர அல் இவற்று ஒடு
ணஃகான் ஆ ஈறு ஆகும் பொது பெயர்
ஞ ந ஒழி அனைத்து ஈற்று அஃறிணை விளிப்பன

304

இ மு பெயர் கண் இயல்பு உம் ஏ உம்
இகர நீட்சி உம் உருபு ஆம் மன் ஏ

305

ஐ இறு பொது பெயர் கு ஆய் உம் ஆ உம்
உருபு ஆம் அல்லவற்று ஆய் உம் ஆகும்

306

ஒரு சார் ன ஈற்று உயர்திணை பெயர் கண்
அளபு ஈறு அழிவு அயல் நீட்சி அதன் ஓடு
ஈறு போதல் அவற்று ஓடு ஓ உறல்
ஈறு அழிந்து ஓ உறல் இறுதி ய ஆதல்
அதன் ஓடு அயல் திரிந்து ஏ உறல் ஈறு அழிந்து
அயல் ஏ ஆதல் உம் விளி உருபு ஆகும்

307

ளஃகான் உயர் பெயர் கு அளபு ஈறு அழிவு அயல்
நீட்சி இறுதி ய ஒற்று ஆதல்
அயல் இல் அகரம் ஏ ஆதல் உம் விளி தனு

308

ர ஈற்று உயர் பெயர் கு அளபு எழல் ஈற்று அயல்
அகரம் இ ஈ ஆதல் ஆண்டை ஆ
ஈ ஆதல் அதன் ஓடு ஏ உறல் ஈற்று ஏ
மிக்கு அயல் யா கெட்டு அதன் அயல் நீடல்
ஈற்றின் ஈர் உறல் இவை உம் ஈண்டு உருபு ஏ

309

லகார ஈற்று உயர் பெயர் கு அளபு அயல் நீட்சி உம்

310

ன ஈற்று உயர்திணை அல் இரு பெயர் கண்
இறுதி அழிவு அதன் ஓடு அயல் நீட்சி

311

ல ள ஈற்று அஃறிணை பெயர் பொது பெயர் கண்
ஈற்று அயல் நீட்சி உம் உருபு ஆகும் ஏ

312

அண்மையின் இயல்பு உம் ஈறு அழிவு உம் சேய்மையின்
அளபு உம் புலம்பின் ஓ உம் ஆகும்

313

நு ஒடு வினா சுட்டு உற்ற ன ள ர
வை து தாம் தான் இன்னன விளியா

314

முதல் ஐ ஐ உறின் சினை ஐ கண் உறும்
அது முதல் கு ஆயின் சினை கு ஐ ஆகும்

315

முதல் இவை சினை இவை என வேறு உள இல
உரைப்போர் குறிப்பின அற்று ஏ பிண்டம் உம்

316

யாதன் உருபின் கூறிற்று ஆயின் உம்
பொருள் செல் மருங்கின் வேற்றுமை சாரும்

317

ஐ ஆன் கு செய்யுள் கு அ உம் ஆகும்
ஆகா அஃறிணை கு ஆன் அல்லாதன

318

எல்லை இன் உம் அது உம் பெயர் கொளும்
அல்ல வினை கொளும் நான்கு ஏழ் இருமை உம்
புல்லும் பெரும்பாலும் என்மனார் புலவர்

319

3.2. வினையியல்

3.2.1. வினைச்சொல்

செய்பவன் கருவி நிலம் செயல் காலம்
செய் பொருள் ஆறு உம் தருவது வினை ஏ

320

பொருள் முதல் ஆறின் உம் தோற்றி முன் ஆறன் உள்
வினை முதல் மாத்திரை விளக்கல் வினைக்குறிப்பு ஏ

321

அவை தாம்
முற்று உம் பெயர் வினை எச்சம் உம் ஆகி
ஒன்றன் கு உரிய உம் பொது உம் ஆகும்

322

3.2.2. வினைமுற்று

பொது இயல்பு ஆறு ஐ உம் தோற்றி பொருட்பெயர்
முதல் அறு பெயர் அலது ஏற்பு இல முற்று ஏ

323

ஒருவன் முதல் ஐந்து ஐ உம் படர்க்கை இடத்து உம்
ஒருமை பன்மை ஐ தன்மை முன்னிலையின் உம்
மு காலத்தின் உம் முரண முறை ஏ
மூ ஐந்து இரு மூன்று ஆறு ஆய் முற்று
வினைப்பதம் ஒன்று ஏ மூ ஒன்பான் ஆம்

324

அன் ஆன் இறு மொழி ஆண்பால் படர்க்கை

325

அள் ஆள் இறு மொழி பெண்பால் படர்க்கை

326

அர் ஆர் ப ஊர் அகரம் மார் ஈற்ற
பல்லோர் படர்க்கை மார் வினை ஒடு முடிம் ஏ

327

து று டு குற்றியலுகர ஈற்ற
ஒன்றன் படர்க்கை டு குறிப்பின் ஆகும்

328

அ ஆ ஈற்ற பலவின் படர்க்கை
ஆ ஏ எதிர்மறை கண்ணது ஆகும்

329

தன்மை முன்னிலை வியங்கோள் வேறு இலை
உண்டு ஈர் எச்சம் இரு திணை பொது வினை

330

கு டு து று என்னும் குன்றியலுகரம் ஓடு
அல் அன் என் ஏன் ஆகும் ஈற்ற
இரு திணை மு கூற்று ஒருமைத்தன்மை

331

அம் ஆம் என்பன முன்னிலையார் ஐ உம்
எம் ஏம் ஓம் இவை படர்க்கையார் ஐ உம்
உம் ஊர் க ட த ற இரு பாலார் ஐ உம்
தன் ஒடு படுக்கும் தன்மைப்பன்மை

332

செய்கு என் ஒருமை உம் செய்கும் என் பன்மை உம்
வினை ஒடு முடியின் உம் விளம்பிய முற்று ஏ

333

முன்னிலை கூடிய படர்க்கை உம் முன்னிலை

334

ஐ ஆய் இகர ஈற்ற மூன்று உம்
ஏவலின் வரூஉம் எல்லா ஈற்ற உம்
மு பால் ஒருமை முன்னிலை மொழி ஏ

335

முன்னிலை முன்னர் ஈ உம் ஏ உம்
அ நிலை மரபின் மெய் ஊர்ந்து வரும் ஏ

336

இர் ஈர் ஈற்ற இரண்டு உம் இரு திணை
பன்மை முன்னிலை மின் அவற்று ஏவல்

337

க ய ஒடு ர ஒற்று ஈற்ற வியங்கோள்
இயலும் இடம் பால் எங்கு உம் என்ப

338

வேறு இல்லை உண்டு ஐம் பால் மூ இடத்தன

339

3.2.3. பெயரெச்சம்

செய்த செய்கின்ற செய்யும் என் பாட்டு இல்
காலம் உம் செயல் உம் தோன்றி பால் ஒடு
செய்வது ஆதி அறு பொருட்பெயர் உம்
எஞ்ச நிற்பது பெயரெச்சம் ஏ

340

செய்யும் என் எச்ச ஈற்று உயிர்மெய் சேறல் உம்
செய்யுள் உள் உம் உந்து ஆகல் உம் முற்றேல்
உயிர் உம் உயிர்மெய் உம் ஏகல் உம் உள ஏ

341

3.2.4. வினையெச்சம்

தொழில் உம் காலம் உம் தோன்றி பால் வினை
ஒழிய நிற்பது வினையெச்சம் ஏ

342

செய்து செய்பு செய்யா செய்யூ
செய்தென செய செயின் செய்யிய செய்யியர்
வான் பான் பாக்கு இன வினையெச்சம் பிற
ஐந்து ஒன்று ஆறு மு காலம் உம் முறை தரும்

343

அவற்று உள்
முதல் இல் நான்கு உம் ஈற்று இல் மூன்று உம்
வினைமுதல் கொள்ளும் பிற உம் ஏற்கும் பிற

344

சினை வினை சினை ஒடு உம் முதல் ஒடு உம் செறியும்

345

சொல் திரியின் உம் பொருள் திரியா வினைக்குறை

346

3.2.5. ஒழிபு

ஆக்க வினைக்குறிப்பு ஆக்கம் இன்று இயலா

347

பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை இல்
செல்லாது ஆகும் செய்யும் என் முற்று ஏ

348

யார் என் வினா வினைக்குறிப்பு உயர் மு பால்

349

எவன் என் வினா வினை குறிப்பு இழி இருபால்

350

வினைமுற்று ஏ வினையெச்சம் ஆகல் உம்
குறிப்புமுற்று ஈர் எச்சம் ஆகல் உம் உள ஏ

351

3.3. பொதுவியல்

இரு திணை ஆண் பெண் உள் ஒன்றன் ஐ ஒழிக்கும்
பெயர் உம் வினை உம் குறிப்பின் ஆன் ஏ

352

பெயர் வினை இடத்து ன ள ர ய ஈற்று அயல்
ஆ ஓ ஆகல் உம் செய்யுள் உள் உரித்து ஏ

353

உருபு உம் வினை உம் எதிர்மறுத்து உரைப்பின் உம்
திரியா தத்தம் ஈற்று உருபு இன் என்ப

354

உருபு பல அடுக்கின் உம் வினை வேறு அடுக்கின் உம்
ஒரு தம் எச்சம் ஈறு உற முடியும்

355

உருபு முற்று ஈர் எச்சம் கொள்ளும்
பெயர் வினை இடை பிற வரல் உம் ஆம் ஏற்பன

356

எச்ச பெயர் வினை எய்தும் ஈற்றின் உம்

357

ஒரு மொழி ஒழி தன் இனம் கொளல் கு உரித்து ஏ

358

பொது பெயர் வினைகளின் பொதுமை நீக்கும்
மேல் வரும் சிறப்பு பெயர் வினை தாம் ஏ

359

பெயர் வினை உம்மை சொல் பிரிப்பு என ஒழியிசை
எதிர்மறை இசை எனும் சொல் ஒழிபு ஒன்பது உம்
குறிப்பு உம் தத்தம் எச்சம் கொள்ளும்

360

3.3.1. தொகைநிலை தொடர்மொழி

பெயர் ஒடு பெயர் உம் வினை உம் வேற்றுமை
முதலிய பொருளின் அவற்றின் உருபு இடை
ஒழிய இரண்டு முதல் ஆ தொடர்ந்து ஒரு
மொழி போல் நடப்பன தொகைநிலை தொடர்ச்சொல்

361

வேற்றுமை வினை பண்பு உவமை உம்மை
அன்மொழி என அ தொகை ஆறு ஆகும்

362

இரண்டு முதல் ஆ இடை ஆறு உருபு உம்
வௌிப்படல் இல்லது வேற்றுமைத்தொகை ஏ

363

காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை

364

பண்பு ஐ விளக்கும் மொழி தொக்கன உம்
ஒரு பொருள் கு இரு பெயர் வந்த உம் குணத்தொகை

365

உவம உருபு இலது உவமத்தொகை ஏ

366

போல புரைய ஒப்ப உறழ
மான கடுப்ப இயைய ஏய்ப்ப
நேர நிகர அன்ன இன்ன
என்ப உம் பிற உம் உவமத்து உருபு ஏ

367

எண்ணல் எடுத்தல் முகத்தல் நீட்டல்
எனும் நான்கு அளவை உள் உம் இலது அ தொகை

368

ஐம் தொகை மொழி மேல் பிற தொகல் அன்மொழி

369

முன் மொழி பின் மொழி பல் மொழி புற மொழி
எனும் நான்கு இடத்து உம் சிறக்கும் தொகை பொருள்

370

வல் ஒற்று வரின் ஏ இடத்தொகை ஆகும்
மெல் ஒற்று வரின் ஏ பெயர்த்தொகை ஆகும்

371

உயர்திணை உம்மைத்தொகை பலர் ஈறு ஏ

372

தொக்குழி மயங்குந இரண்டு முதல் ஏழ்
எல்லை பொருளின் மயங்கும் என்ப

373

3.3.2. தொகாநிலை தொடர்மொழி

முற்று ஈர் எச்சம் எழுவாய் விளி பொருள்
ஆறு உருபு இடை உரி அடுக்கு இவை தொகாநிலை

374

3.3.3. வழாநிலை வழுவமைதி

திணை ஏ பால் இடம் பொழுது வினா இறை
மரபு ஆம் ஏழ் உம் மயங்கின் ஆம் வழு ஏ

375

ஐயம் திணை பால் அ அ பொதுவின் உம்
மெய் தெரி பொருள் மேல் அன்மை உம் விளம்புப

376

உயர்திணை தொடர்ந்த பொருள் முதல் ஆறு உம்
அதன் ஒடு சார்த்தின் அ திணை முடிபின

377

திணை பால் பொருள் பல விரவின சிறப்பின் உம்
மிகவின் உம் இழிபின் உம் ஒரு முடிபின ஏ

378

உவப்பின் உம் உயர்வின் உம் சிறப்பின் உம் செறலின் உம்
இழிப்பின் உம் பால் திணை இழுக்கின் உம் இயல்பு ஏ

379

ஒருமையின் பன்மை உம் பன்மையின் ஒருமை உம்
ஓர் இடம் பிற இடம் தழுவல் உம் உள ஏ

380

தரல் வரல் கொடை செலல் சாரும் படர்க்கை
எழுவாய் இரண்டு உம் எஞ்சிய ஏற்கும்

381

இறப்பு எதிர்வு நிகழ்வு என காலம் மூன்று ஏ

382

மு காலத்தின் உம் ஒத்து இயல் பொருள் ஐ
செப்புவர் நிகழும் காலத்து ஆன் ஏ

383

விரைவின் உம் மிகவின் உம் தௌிவின் உம் இயல்பின் உம்
பிறழ உம் பெறூஉம் மு காலம் உம் ஏற்புழி

384

அறிவு அறியாமை ஐயுறல் கொளல் கொடை
ஏவல் தரும் வினா ஆறு உம் இழுக்கார்

385

சுட்டு மறை நேர் ஏவல் வினாதல்
உற்றது உரைத்தல் உறுவது கூறல்
இனமொழி எனும் எண் இறை உள் இறுதி
நிலவிய ஐந்து உம் அ பொருண்மையின் நேர்ப

386

வினாவின் உம் செப்பின் உம் விரவா சினை முதல்

387

எ பொருள் எ சொலின் எ ஆறு உயர்ந்தோர்
செப்பினர் அ படி செப்புதல் மரபு ஏ

388

வேறு வினை பல் பொருள் தழுவிய பொது சொல் உம்
வேறு அவற்று எண் உம் ஓர் பொது வினை வேண்டும்

389

வினை சார்பு இனம் இடம் மேவி விளங்கா
பல பொருள் ஒரு சொல் பணிப்பர் சிறப்பு எடுத்து ஏ

390

எழுத்து இயல் திரியா பொருள் திரி புணர்மொழி
இசை திரிபு ஆல் தௌிவு எய்தும் என்ப

391

ஒரு பொருள் மேல் பல பெயர் வரின் இறுதி
ஒரு வினை கொடுப்ப தனியும் ஒரோ வழி

392

திணை நிலம் சாதி குடி ஏ உடைமை
குணம் தொழில் கல்வி சிறப்பு ஆம் பெயர் ஓடு
இயற்பெயர் ஏற்றிடின் பின் வரல் சிறப்பு ஏ

393

படர்க்கை மு பெயர் ஓடு அணையின் சுட்டு
பெயர் பின் வரும் வினை எனின் பெயர் கு எங்கு உம்
மருவும் வழக்கு இடை செய்யுள் கு ஏற்புழி

394

அசைநிலை பொருள்நிலை இசைநிறை கு ஒரு சொல்
இரண்டு மூன்று நான்கு எல்லை முறை அடுக்கும்

395

இரட்டைக்கிளவி இரட்டு இன் பிரிந்து இசையா

396

ஒரு பொருள் பல் பெயர் பிரிவு இல வரையார்

397


ஒருபொருட்பன்மொழி சிறப்பின் இன் வழா

398

இனைத்து என்று அறி பொருள் உலகின் இலா பொருள்
வினைப்படுத்து உரைப்பின் உம்மை வேண்டும்

399

செயப்படுபொருள் ஐ செய்தது போல
தொழிற்பட கிளத்தல் உம் வழக்கின் உள் உரித்து ஏ

400

பொருள் முதல் ஆறு ஆம் அடை சேர் மொழி இனம்
உள்ள உம் இல்ல உம் ஆம் இரு வழக்கின் உம்

401

அடை மொழி இனம் அல்லது உம் தரும் ஆண்டு உறின்

402

அடை சினை முதல் முறை அடைதல் உம் ஈர் அடை
முதல் ஓடு ஆதல் உம் வழக்கு இயல் ஈர் அடை
சினை ஒடு செறிதல் உம் மயங்கல் உம் செய்யுள் கு ஏ

403

இயற்கை பொருள் ஐ இற்று என கிளத்தல்

404

காரணம் முதல் ஆ ஆக்கம் பெற்று உம்
காரணம் இன்றி ஆக்கம் பெற்று உம்
ஆக்கம் இன்றி காரணம் அடுத்து உம்
இருமை உம் இன்றி உம் இயலும் செயும் பொருள்

405

தம் பால் இல்லது இல் எனின் இனன் ஆய்
உள்ளது கூறி மாற்றி உம் உள்ளது
சுட்டி உம் உரைப்பர் சொல் சுருங்குதல் கு ஏ

406

ஈ தா கொடு எனும் மூன்று உம் முறை ஏ
இழிந்தோன் ஒப்போன் மிக்கோன் இரப்பு உரை

407

முன்னத்தின் உணரும் கிளவி உம் உள ஏ

408

கேட்குந போல உம் கிளக்குந போல உம்
இயங்குந போல உம் இயற்றுந போல உம்
அஃறிணை மருங்கின் உம் அறையப்படும் ஏ

409

உருவக உவமை இல் திணை சினை முதல்கள்
பிறழ்தல் உம் பிற உம் பேணினர் கொளல் ஏ

410

3.3.4. பொருள்கோள்

யாற்றுநீர் மொழிமாற்று நிரல்நிறை விற்பூண்
தாப்பிசை அளைமறிபாப்பு கொண்டுகூட்டு
அடிமறிமாற்று என பொருள்கோள் எட்டு ஏ

411

மற்றைய நோக்காது அடி தொறு உம் வான் பொருள்
அற்று அற்று ஒழுகும் அஃது யாற்றுப்புனல் ஏ

412

ஏற்ற பொருள் கு இயையும் மொழிகள் ஐ
மாற்றி ஓர் அடி உள் வழங்கல் மொழிமாற்று ஏ

413

பெயர் உம் வினை உம் ஆம் சொல் ஐ உம் பொருள் ஐ உம்
வேறு நிரல் நிறீஇ முறையின் உம் எதிரின் உம்
நேரும் பொருள்கோள்நிரல்நிறை நெறி ஏ

414

எழுவாய் இறுதி நிலை மொழி தம் உள்
பொருள் நோக்கு உடையது பூட்டுவில் ஆகும்

415

இடை நிலை மொழி ஏ ஏனை ஈர் இடத்து உம்
நடந்து பொருள் ஐ நண்ணுதல் தாப்பிசை

416

செய்யுள் இறுதி மொழி இடை முதலின் உம்
எய்திய பொருள்கோள் அளைமறிபாப்பு ஏ

417

யாப்பு அடி பலவின் உம் கோப்பு உடை மொழிகள் ஐ
ஏற்புழி இசைப்பது கொண்டுகூட்டு ஏ

418

ஏற்புழி எடுத்து உடன் கூட்டுறும் அடிய உம்
யாப்பு ஈறு இடை முதல் ஆக்கின் உம் பொருள் இசை
மாட்சி உம் மாறா அடிய உம் அடிமறி

419

3.4. இடையியல்

வேற்றுமை வினை சாரியை ஒப்பு உருபுகள்
தத்தம் பொருள இசைநிறை அசைநிலை
குறிப்பு என் எண் பகுதியின் தனித்து இயல் இன்றி
பெயரின் உம் வினையின் உம் பின் முன் ஓர் இடத்து
ஒன்று உம் பல உம் வந்து ஒன்றுவது இடைச்சொல்

420

தெரிநிலை தேற்றம் ஐயம் முற்று எண் சிறப்பு
எதிர்மறை எச்சம் வினா விழைவு ஒழியிசை
பிரிப்பு கழிவு ஆக்கம் இன்னன இடை பொருள்

421

பிரிநிலை வினா எண் ஈற்றசை தேற்றம்
இசைநிறை என ஆறு ஏகாரம் ஏ

422

ஒழியிசை வினா சிறப்பு எதிர்மறை தெரிநிலை
கழிவு அசைநிலை பிரிப்பு என எட்டு ஓ ஏ

423

வினை பெயர் குறிப்பு இசை எண் பண்பு ஆறின் உம்
என எனும் மொழி வரும் என்று உம் அற்று ஏ

424

எதிர்மறை சிறப்பு ஐயம் எச்சம் முற்று அளவை
தெரிநிலை ஆக்கம் ஓடு உம்மை எட்டு ஏ

425

முற்று உம்மை ஒரோ வழி எச்சம் உம் ஆகும்

426

செவ்வெண் ஈற்றது ஆம் எச்ச உம்மை

427

பெயர்ச்செவ்வெண் ஏ என்றா எனா எண்
நான்கு உம் தொகை பெறும் உம்மை என்று என ஓடு
இ நான்கு எண் உம் அஃது இன்றி உம் இயலும்

428

என்று உம் என உம் ஒடு உம் ஒரோ வழி
நின்று உம் பிரிந்து எண் பொருள் தொறு உம் நேரும்

429

வினை ஒடு வரின் உம் எண் இனைய ஏற்பன

430

விழைவு ஏ காலம் ஒழியிசை தில் ஏ

431

மன் ஏ அசைநிலை ஒழியிசை ஆக்கம்
கழிவு மிகுதி நிலைபேறு ஆகும்

432

வினைமாற்று அசைநிலை பிறிது எனும் மற்று ஏ

433

மற்றையது என்பது சுட்டியதன் கு இனம்

434

கொல் ஏ ஐயம் அசைநிலை கூற்று ஏ

435

ஒடு உம் தெய்ய உம் இசைநிறை மொழி ஏ

436

அந்தில் ஆங்கு அசைநிலை இட பொருள ஏ

437

அம்ம உரையசை கேண்மின் என்று ஆகும்

438

மா என் கிளவி வியங்கோள் அசைச்சொல்

439

மியா இக மோ மதி அத்தை இத்தை
வாழிய மாள ஈ யாழ முன்னிலை அசை

440

யா கா பிற பிறக்கு அரோ போ மாது இகும்
சின் குரை ஓரும் போலும் இருந்து இட்டு
அன்று ஆம் தாம் தான் கின்று நின்று அசைமொழி

441

3.5. உரியியல்

பல் வகை பண்பு உம் பகர் பெயர் ஆகி
ஒரு குணம் பல குணம் தழுவி பெயர் வினை
ஒருவா செய்யு் கு உரியன உரிச்சொல்

442

உயிர் உயிர் அல்லது ஆம் பொருள் குணம் பண்பு ஏ

443

ஒன்று முதல் ஆ கீழ் கொண்டு மேல் உணர்தலின்
ஓர் அறிவு ஆதி ஆ உயிர் ஐந்து ஆகும்

444

புல் மரம் முதல உற்று அறியும் ஓர் அறிவு உயிர்

445

முரள் நந்து ஆதி நா அறிவு ஒடு ஈர் அறிவு உயிர்

446

சிதல் எறும்பு ஆதி மூக்கு அறிவின் மூ அறிவு உயிர்

447

தும்பி வண்டு ஆதி கண் அறிவின் நால் அறிவு உயிர்

448

வானவர் மக்கள் நரகர் விலங்கு புள்
ஆதி செவி அறிவு ஓடு ஐ அறிவு உயிர் ஏ

449

உணர்வு இயல் ஆம் உயிர் ஒன்று உம் ஒழித்த
உடல் முதல் அனைத்து உம் உயிர் அல் பொருள் ஏ

450

ஒற்றுமை நயத்தின் ஒன்று என தோன்றின் உம்
வேற்றுமை நயத்தின் வேறு ஏ உடல் உயிர்

451

அறிவு அருள் ஆசை அச்சம் மானம்
நிறை பொறை ஓர்ப்பு கடைப்பிடி மையல்
நினைவு வெறுப்பு உவப்பு இரக்கம் நாண் வெகுளி
துணிவு அழுக்காறு அன்பு எளிமை எய்த்தல்
துன்பம் இன்பம் இளமை மூப்பு இகல்
வென்றி பொச்சாப்பு ஊக்கம் மறம் மதம்
மறவி இனைய உடல் கொள் உயிர் குணம்

452

துய்த்தல் துஞ்சல் தொழுதல் அணிதல்
உய்த்தல் ஆதி உடல் உயிர் தொழில் குணம்

453

பல் வகை வடிவு இரு நாற்றம் ஐ வண்ணம்
அறு சுவை ஊறு எட்டு உயிர் அல் பொருள் குணம்

454

தோன்றல் மறைதல் வளர்தல் சுருங்கல்
நீங்கல் அடைதல் நடுங்கல் இசைத்தல்
ஈதல் இன்னன இரு பொருள் தொழில் குணம்

455

சால உறு தவ நனி கூர் கழி மிகல்

456

கடி என் கிளவி காப்பு ஏ கூர்மை
விரை ஏ விளக்கம் அச்சம் சிறப்பு ஏ
விரைவு ஏ மிகுதி புதுமை ஆர்த்தல்
வரைவு ஏ மன்றல் கரிப்பின் ஆகும்

457

மாற்றம் நுவற்சி செப்பு உரை கரை நொடி இசை
கூற்று புகறல் மொழி கிளவி விளம்பு அறை
பாட்டு பகர்ச்சி இயம்பல் சொல் ஏ

458

முழக்கு இரட்டு ஒலி கலி இசை துவை பிளிறு இரை
இரக்கு அழுங்கு இயம்பல் இமிழ் குளிறு அதிர் குரை
கனை சிலை சும்மை கௌவை கம்பலை
அரவம் ஆர்ப்பு ஓடு இன்னன ஓசை

459

இன்னது இன்னுழி இன்னணம் இயலும்
என்று இசை நூல் உள் குண குணிப்பெயர்கள்
சொல்லாம் பரத்தலின் பிங்கலம் முதல் ஆ
நல்லோர் உரிச்சொல் இல் நயந்தனர் கொளல் ஏ

460

சொல் தொறு உம் இற்று இதன் பெற்றி என்று அனைத்து உம்
முற்ற மொழிகுறின் முடிவு இல ஆதலின்
சொற்றவற்று இயல் ஆன் மற்றைய பிற உம்
தெற்று என உணர்தல் தெள்ளியோர் திறன் ஏ

461

பழையன கழிதல் உம் புதியன புகுதல் உம்
வழு அல கால வகையின் ஆன் ஏ

462

மேலும் வாசிக்க...

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP